12 ராசிக்கும் இருக்கும் அதி உச்ச சக்தி! யார் யார் எப்படிப் பட்டவர்கள் தெரியுமா?
ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன.
நவகிரகம் ஆழும் ராசிகளின் குணமே சக்தி வாய்ந்த பலம்.
இந்த மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கவர்கள். எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பவர்கள்.
வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள். மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும் என்றாலும் அதை எளிதில் கையாளுவீர்கள்.
ரிஷபம்
அழகான தோற்றத்தைக் கொண்டவர்கள். இவர்களின் நட்பு வட்டம் பெரியதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள்.
மிதுனம்
அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். உங்களின் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் நீங்கள் உங்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை. ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள்.
கடகம்
பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வாழ்வில் மிக வேகமாக முன்னேற்ற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவீர்கள். பணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும்.
சிம்மம்
வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் உங்களுக்கு போராட்டம் தான். நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள்.
கன்னி
புதனை ராசி நாயகனாகக் கொண்ட நீங்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பேசுவதில் ஆற்றல் பெற்றவர்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். திருமணம் முடிக்கும் போது கவனமாகப் இருப்பது அவசியம். உங்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம்.
துலாம்
கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் உங்களைப் போல நல்லவர்கள் யாரும் இல்லை. வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள்.
விருச்சிகம்
எந்த செயலையும் ஆர்வத்தோடு கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்கள் நீங்கள். தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள்.
தனுசு
வீரமும், விவேகமும் கொண்டவர்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். கவரிமான் பரம்பரை என்று தான் உங்களைச் சொல்ல வேண்டும்.
மகரம்
பொறுமைசாலிகளாக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை பெற முடியும். தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும். தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும்.
கும்பம்
தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டீர்கள். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்.
தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள்.
மீனம்
தானம் செய்வதில் ஆர்வம் கொண்ட நீங்கள், நிதானம் பெற்றிருந்தால் பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். மனதிற்கு எது சரியொன்று தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள்.
எந்த நிலையிலும் எல்லோரையும் மதிப்பீர்கள். எவ்வளவு பெரிய பதவி என்றாலும் தானே தேடிவரும் அதுதான் உங்களின் தனித்தன்மை.