கோடீஸ்வரர் போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா?
இந்த உலகத்தில் கடவுளுக்கு அடுத்தப்படியாக மனிதன் பணத்தைத்தான் அதிகம் நேசிக்கிறான். பணம் இல்லையென்றால் உன்னை யாரும் மதிக்கமாட்டர்கள் என்று சிலர் கூறுவதும் உண்டு. சிலருக்கு பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். அதற்காகத்தான் உழைக்கிறார்கள்.
என்னதான் உழைத்தாலும் பணம் மட்டும் சேர்ந்தபாடில்லை என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள். பணம் சேர வேண்டும் என்று சிலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும். பண கஷ்டங்கள் தீர்ந்து, வசதியான வாழ்க்கை வாழ பலர் மகாலட்சுமியின் அருளை வேண்டி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். கனவிலானது நாம் கோட்டீஸ்வரராக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிலர் கற்பனை கூட செய்து பார்ப்பார்கள்.
அப்படிப்பட்ட கனவு வந்தால் நல்லதா, கெட்டதா என்றும், கனவுகள் சொல்லும் அர்த்தம் என்ன என்பது குறித்து பார்ப்போம் -
1. உங்கள் கனவில் தெய்வம் வந்தால், உங்களுக்கு பணமழை கொட்டப்போகிறது என்று அர்த்ததாம்.
2. ஏதோ ஒரு பெண் டான்ஸ் ஆடுவது போல் கனவு வந்தால் செல்வம் செழிக்கப்போகிறது என்று அர்த்தம்.
3. மீன் கொத்தி பறவை உங்கள் கனவில் வந்தால் பணவரவு அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தம்
4. கடம்ப மரம் கனவில் வந்தால் செல்வ வளம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்
5. நெல்லிக்காய், தாமரை மலர் கனவில் வந்தால் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வரப்போகிறார் என்று அர்த்தம்
6. காதில் கம்மல் அணிந்து அழகு பார்ப்பது போல் கனவு வந்தால் பணம் வரவு இருக்குமாம்.
7. உங்கள் கனவில் விவசாயி வயலில் வேலை செய்வது போல, தங்கம், மோதிரம், அரண்மனை கனவில் வந்தால் செல்வம் செழிக்கப்போகிறது என்று அர்த்தமாம்.
8. பசு பால் தருவது போல, வெள்ளை குதிரை கனவில் வந்தால் பணவரவு கிடைக்குமாம்.
9. மரத்தில் ஏறுவது போல் கனவு வந்தால், பணம் சேர்ந்து வாழ்வில் உயரப்போகிறீர்கள் என்று அர்த்தமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |