வக்ரமாகும் செவ்வாயால் 10 நாட்களில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்! யாருக்கு பேராபத்து?
செவ்வாய் மிதுன ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார்.
இந்த வக்ர நிலையில் நவம்பர் 13 ஆம் திகதி ரிஷப ராசியை செவ்வாய் அடையவுள்ளார்.
இப்படி செவ்வாய் வக்ரமாகும் போது கோபம் உக்கிரமடையும். இந்த காலக்கட்டத்தில் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
இந்த ராசி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள். பணிபுரிபவர்களுக்கு வேலை அழுத்தமானது மன உளைச்சலை ஏற்படுத்தும்.
ரிஷபம்
கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது காதல் உறவைப் பாதிக்கலாம் எச்சரிக்கை. பயணங்கள் உங்கள் செலவுகளை அதிகரிக்கும்.
மிதுனம்
இக்காலத்தில் உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
உங்களின் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
இக்காலத்தில் பல வாய்ப்புக்களால் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். எனினும் அதித நம்பிக்கையை வளரவிடாதீர்கள் பிரச்சனையை சந்திப்பீர்கள்.
கன்னி
வேலையில் முன்னேற்றத்தைக் காண அதிக முயற்சியை எடுக்க வேண்டும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
துலாம்
திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் வாய்ப்புள்ளது. உங்களின் பணிகளில் தடைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் தொழில் ரீதியாக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம்
இக்காலத்தில் எந்த காரியத்திலும் நீங்கள் முழு முயற்சியை எடுத்தால், உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
கும்பம்
உங்கள் குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். இக்காலத்தில் நீங்கள் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகளை பார்த்து பேசுங்கள்.
மீனம்
இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மேலும் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.