வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி: பரிதாபமாக உயிரிழந்த சோகம்
கோவையில் அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகள் சிவசுந்தரி (16). இவர் நெகமம் அடுத்துள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி சிவசுந்தரி, தனது வகுப்பறையில் பாடம் கவனித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென சிவசுந்தரி மயங்கி விழுந்த நிலையில் ஆசிரியர் மற்றும் சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
.ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்த நிலையில், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மரத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.