செல்போனில் கேம் விளையாடி திட்டு வாங்கிய பார்த்திபன் தற்கொலை - பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்
தாய் திட்டியதால் ஆத்திரத்தில் கோபித்துக்கொண்டு சென்ற பார்த்திபன் என்ற சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது, ஆன்லைன் வகுப்பை புறக்கணித்து விட்டு செல்போனில் கேம் விளையாடியதால் ஆத்திரமடைந்த அவரது தாய் பார்த்திபனை திட்டி அவனிடமிருந்து செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார்.
இதனால், கோபித்துக்கொண்டு பார்த்திபன் கடந்த 4ம் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர் மகனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
இந்நிலையில், இன்று அதிகாலை மாணவனின் சடலம் காவிரி ஆற்றில் மிதப்பாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.