100வயதை கடந்து வாழணுமா? 105 வயது மருத்துவர் கூறும் எளிய வழிகள்!
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இளமையானவும் ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் அனைவருக்கும் இது சாத்தியமாவது கிடையாது.
உலக நாடுகளிலேயே ஜப்பானில் தான் நூறு வயது கடந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஜப்பானில் 105 வயதை கடந்து வாழும் மருத்துவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ எவ்வாறான வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என பரிந்துரைக்கின்றார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த குறித்த 105 வயது மருத்துவரின் பெயர், ஷிகேகி ஹினோஹாரா. இவர், 100 வணதை தாண்டி வாழ்வது பெரிய விடயம் அல்ல வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே இந்த இலக்கை அடைந்துவிடலாம் என குறிப்பிடுகின்றார்.
ஷிகேகி ஹினோஹாராவின் simple tips
பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் கண்டிப்பாக வேலையில் இருந்து ஓய்வு பெறுவதை நாம் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.
ஆனால், மருத்துவர் ஹினோஹாரா குறிப்பி்டுகையில் நாம் அதிக காலம் உயிர் வாழ வேண்டுமென விரும்பினால் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றார். அப்போதுதான் உடல் சீரான ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த மருத்துவரும் 100 வயது வரை 18 மணி நேரம் வேலை செய்தாரார் என குறிப்பிட்டுள்ளார்.
வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோட்ட பராமரிப்பு, வாலண்டியர் செய்வது போன்ற விஷயங்களில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் அப்போது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்கும். இது நீண்ட ஆயுளில் பெரும் பங்கு வகிக்கின்றது.
உடலுக்கு உழைப்பு கொடுப்பது என்பது இன்றியமையாதது என்கிறார் ஹினோஹோரா. வாக்கிங் செய்வது, படிகளை பயன்படுத்துவது, மெதுவான உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றை செய்ய ஒருபோதும் தயக்கம் காட்ட கூடாது என்கின்றார்.இந்த விடயங்கள் உடலின் நெகிழ்வு தன்மையை பாதுகாக்க மிகவும் அவசியம்.
குறிப்பாக அவர் மீன், அரிசி சாதம், மெல்லிய புரதம் நிறைந்த இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்வாராம். இவர் ‘ஹரா ஹாச்சி பூ’ எனும் முறையை பின்பற்றுகிறார். அதாவது வயிறு 80% முழுதாகும் வரை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.
ஒரு சிறப்பான நோக்கத்துடன் வாழ்ந்தால் கண்டிப்பாக நமது வாழ்நாள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிடுகின்றார். இதை மருத்துவர் ஹினோஹராவும் நம்புவதாகவும் குறிப்பிடுட்டுள்ளார். முக்கியமாக தினசரி எழும் போது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு எழுவதை வழக்கமாக்கிக் கொற்வது ஆயுளை அதிகரிக்கும் என இவர் குறிப்பிடுகின்றார்.
அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்., பிடித்த விஷயங்களை செய்வதாக அல்லது எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்ற சிறிய காரணமாக கூட இருக்கலாம்.
நாம், வாழ்வில் என்ன செய்தாலும் அமைதியாக உட்காராமல், ஏதாவது ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பது வாழ்நாளை நீடிக்கும். முக்கியமாக உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மெய் தான் ஆனால் சளி, தும்மல் வந்தால் கூட, அது குறித்து பெரிதாக யோசித்து நேரத்தை வீணாக்க கூடாது என ஹீனோஹாரா குறிப்பிடுகின்றார்.
பசி ஏற்படும் போது சாப்பி்டுவது போல, ஆன்மாவிற்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்கிறார் ஹினோஹரா. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, எதையாவது கற்றுக்கொள்வது, கலை செய்வது, மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வது என ஏதாவது ஒரு மனதுக்கு ஆறுதல் கொடுக்கும் விடயத்தை தினசரி செய்வது சீரான அரோக்கியத்தையும், நீண்ட ஆளுளையும் கொடுக்கும் என குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
