மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய சிறுமியின் காட்சி.. சில மணி நேரத்தில் உயிரிழந்த சோகம்
மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி சில மணி நேரத்தில் உயிரிழந்த சோகம் இந்திய மாநிலமான பஞ்சாப்பில் நடந்துள்ளது.
சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, தனது பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.
இவர் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரது பெற்றோர்கள் பட்டியாலாவில் உள்ள அதாலத் பஜார் எனும் இடத்திலுள்ள பேக்கரி ஒன்றில் கேக் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர்.
குறித்த கேக் மாலை 6 மணி அளவில் வந்ததை அடுத்து, குடும்பத்தினர் சுமார் 7 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
திடீர் உடல்நலக்குறைவு
இந்நிலையில் கேக் வெட்டிய சில மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணிக்கு குடும்பத்தினர் அனைவருக்கும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
சிறுமி தனக்கு தாகம் எடுப்பதாகவும், வாய் வறட்சியாக இருப்பதாகவும் கூறிவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் சகோதரிகள் இருவர், கேக் சாப்பிட்டு இரவே வாந்தி எடுத்ததால், அவர்களுக்கு பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.
கடைசி காணொளி
சிறுமியின் உயிரைப் பறித்தது பிறந்தநாள் கேக் தானா? அதில் விஷம் ஏதும் கலந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 years Patiala girl Manvi lost her life after consuming bday cake which family orders from local backery. Very sad news. pic.twitter.com/QzbOItnX07
— Raovarinder Singh Benipal (@RaovarinderSin2) March 30, 2024
இந்நிலையில் சிறுமி மகிழ்ச்சியாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சி இணையத்தில் வெளியாகி சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும், கேக்கின் மாதிரி மேற்கட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |