10 மாத குழந்தைக்கு அரசுப்பணி! என்ன காரணம் தெரியுமா?
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் பெற்றோரை இழந்த 10 மாத குழந்தைக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் யாதவ். இவரது மனைவியின் பெயர் மஞ்சு யாதவ். இந்த தம்பதியருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
ரயில்வே யார்டில் உதவியாளராக ராஜேந்திர குமார் பணியாற்றி வந்தார், கடந்த ஜூன் 1ஆம் திகதி எதிர்பாராமல் நடந்த விபத்தில் ராஜேந்திர குமாரும், அவரது மனைவியும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
அதிர்ஷ்டவசமாக அவர்களது 10 மாத பெண் குழந்தை உயிர்தப்பியது, இதனைத் தொடர்ந்து, குழந்தையை அவரின் பாட்டி பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த குழந்தைக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது, இதற்காக ரயில்வே பதிவேடுகளில் குழந்தையின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த குழந்தைக்கு 18 வயது ஆகும்போது தேசிய போக்குவரத்து துறையில் பணி அமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கருணை அடிப்படையில் குழந்தைக்கு அரசு பணி அளிக்கப்படுவது வரலாற்றில் இதுதான் முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெற்றோரை இழந்த அந்த குழந்தைக்கு, ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தால் அனைத்து உதவிகளுக்கு விதிகளின்படி வழங்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.