பத்தே நிமிடத்தில் நோர்த் இந்தியன் ஸ்டைலில் வெங்காய மசாலா ரெசிபி இதோ
பொதுவாக கறிக்கு வெங்காயம் போட்டு சமைப்பார்கள். வெங்காயத்தில் வைட்டமின் இ நிறைந்து காணப்படுகின்றது. இது கல வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
இந்த வெங்காயத்தை வைத்து இன்று வெங்காய மாசால ரெசிபி செய்து பார்க்கலாம். இந்த வெங்காய மசாலாவை நீங்கள் காலை உணவுடன் வைத்து சாப்பிடலாம்.
இது ரொட்டி ஷப்பாத்தி போன்ற உணவுகளுடன் வைத்து உண்ணலாம். இது முழுக்க முழுக்க வெங்காயத்தை வைத்து தான் செய்யப்படும் ரெசிபியாகும்.
தேவையான பொருட்கள்
- தக்காளி - 200 கிராம்
- பூண்டு - 7 பல்
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- வெங்காயம் - 22
- சீரகம் - அரை தேக்கரண்டி
- சோம்பு - அரை தேக்கரண்டி
- கருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் - 2
- இஞ்சி - அரை தேக்கரண்டி நறுக்கியது
- பச்ச மிளகாய் -2 நறுக்கியது
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- தனியாதூள் - அரை தேக்கரண்டி
- உப்பு - அரை தேக்கரண்டி
- தண்ணீர் - 1 கப்
- தயிர் - அரை கப்
- கசூரி மேத்தி
செய்யும் முறை
முதலில் தக்காளி மற்றும் பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி எடுத்து வைக்க வேண்டும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் சோம்பு கருஞ்சீரகம் பெருங்காயத்தூள் வெங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறத்தில் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள்தூள் மிளகாய் தூள் தனியாதூள் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொஞ்சமாக தண்ணிர் சேர்க்க வேண்டும்.
பின்னர் நன்றாக இது கொதித்ததன் பின் இதில் அரைத்த தக்காளியை சேர்க்க வேண்டும். இதை நன்றாக மிக்ஸ் செய்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் தண்ணீரை சேர்த்து நன்றாக கிண்டி கெள்ளவும்.
இதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் வறுத்த வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வெங்காயத்தை வேக வைத்து எடுத்தால் வெங்காய மசாலா தயார்.