திருமணத்திற்கு 10 பொருத்தம் பார்ப்பது எதற்காக? பலருக்கும் தெரியாத உண்மை
ஜோதிடத்தின் பார்வையில், திருமணத்திற்கு பெரியவர்கள், அவசியமாக பார்க்கும் பொருத்தங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
திருமணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். நம் முன்னோர்கள் திருமணத்தை மதத்தோடும், தங்கள் கலாச்சாரத்தோடும் தொடர்புப்படுத்திப் போற்றுவது தான் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. அத்தகைய திருமணம் பற்றிய பேச்சுக்கள் எழும் போது எல்லாம், ஜாதகம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு கொண்டே தான் இருக்கும்.
நம்முடைய பெற்றோர்கள் திருமணப் பொருத்தங்கள் சரியாக உள்ளதா, இல்லையா என அறிந்து கொள்வர். எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது இருக்க வேண்டும். பத்து பொருத்தமும், பொருந்தியிருந்தால் பாதி திருமணம் முடிந்த மாதிரி தான் என்பார்கள்.
அப்படியாக, திருமணத்திற்கு அவசியமாக பார்க்கும் பொருத்தங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
பத்து பொருத்தங்கள் என்னென்ன?
தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் என்பன ஆகும்.
கணப்பொருத்தம்:
வரப்போகும் துணையின் குணத்தை பற்றி தெரிந்து வைத்து கொள்ள கூடிய பொருத்தமாகும். கணவன் மனைவி இடையே அன்பு, பாசம் செட் ஆகுமா என்பதை பற்றி தெரிந்து வைத்து கொள்ள பார்க்கப்படுகிறது.
மகேந்திரப் பொருத்தம்:
திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுதான் மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. இந்த பொருத்தம் இருந்ததால் தான் குலம் விருத்தி அடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தினப் பொருத்தம்:
மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த பொருத்தம், மணமக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடுவதற்காக பார்க்கப்படுகின்றது. இதே போல வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள், கஷ்ட நஷ்டங்களை கடந்து வாழ்க்கையை ஒற்றுமையாக நடத்த தினப் பொருத்தம் முக்கியமானதாகும்.
யோனிப் பொருத்தம்:
இது திருமணத்திற்கு பின் மணமக்களின் உடல் தேவையை எந்த வகையில் பூர்த்தி செய்து கொள்வார்கள். இருவருக்கும் இதில் முரண்பாடு ஏற்படாமல் இருக்க யோனி பொருத்தம் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக., கணவன்-மனைவி இருவருக்கும் செக்ஸ் உறவில் இருக்கும் ஈர்ப்பு, அன்பு ஆகியவை குறித்து அறிவது யோனிப் பொருத்தம் என்று அழைக்கப்படுகிறது.
குடும்ப ஒன்றுமைக்காக ராசி பொருத்தம்:
குடும்ப ஒற்றுமைக்காகவும், கணவன்-மனைவி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும். தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமையோடு விட்டு கொடுத்து செல்ல ராசி பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.
ஸ்திரீ தீர்க்கம்:
மணமகள் தீர்க்க சுமங்கலியாக வாழ பார்க்கப்படுவது ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. திருமணம் செய்வதன் முக்கிய அம்சமாகும். தனம், தான்யம் விருத்திக்கு ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் இருக்க வேண்டும்.
