6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன்! தகவல் கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த, பள்ளிகொண்டா ராஜூ(30) என்பவர் 6 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளார். இதனையடுத்து, இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை அவர் பிடிபடாததால், தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளது.
மேலும், காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், அந்த குற்றவாளி வயதை நெருங்கியவர் என்றும், அந்த குற்றவாளியின் உயரம் தோராயமாக 5.9 அடி இருக்கும் என்றும், அந்த குற்றவாளி தனது இரு கைகளிலும் மவுனிகா என பச்சை(Tattoos) குத்தியிருப்பான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த குற்றவாளி குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
— హైదరాబాద్ సిటీ పోలీస్ Hyderabad City Police (@hydcitypolice) September 14, 2021