Doctor Sharmika: 3 வேளை உணவை இப்படி சாப்பிடுங்க - 3 மாதத்தில் 10 கிலோ குறையும்
உடல் எடை என்பது தற்போது இருக்கும் மக்களின் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் நோய் தொற்றுக்கள் வரும் பல பிரச்சனைகள் சேர்த்து வரும்.
உடலில் கெட்ட கொழுப்பு தேங்கி நிற்கும் போது அது உடலில் பெரும் ஆபத்தை அதிகரிக்கும். ஆனால் உடல் அதிகரிக்க பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் உடல் எடை குறைக்க காரணம் நீங்கள் மட்டும் தான் இதை டாக்டர் சர்மிகா கூறுகின்றார். எனவே உணவை மற்றும் மாற்றி பழக்க வழக்கத்தை பழக்கப்படுத்திக்கொண்டு இலகுவான வழியில் எடை குறைக்கு முறை பற்றி டார்கடர் ஷர்மிகா கூறியுள்ளார்.
டாக்டர் ஷர்மிகா
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கடினமான உடற்பயிற்சிகள், தீவிரமான டயட் என்று உடலை வறுத்திக் கொள்ளாமல் எளிதான வழிமுறைகளை பின்பற்றிக்கூட உடல் எடையை குறைக்க முடியும்.
குறிப்பாக உடல் பருமனாக இருக்கும்போது பெரும்பாலானோர் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருப்பார்கள்.
அவர்கள் போதுமான அளவு சாப்பாடு, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ், உடல் செயல்பாடுகள், சாப்பிடும் போது கவனமாக சாப்பிடுதல் போன்றவற்றின் மூலம் எடையை குறைக்க முடியும்.
ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சிலர் கூறுவார்கள் எனக்கு கர்ப்பத்திற்கு பின்னர் எடையை குறைக்க முடியவில்லை, எனக்கு சக்கரை நோய் இருக்கு அது எடை அதிகரிக்க காரணம், எனக்கு மாதவிடாய் ஒழுங்கின்மை இருக்கிறது அது தான் எடை அதிகரிக்க காரணம் என பல காரணங்கள் கூறுவார்கள்.
இவற்றினால் எடை அதிகரித்து இருக்கலாம். ஆனால் குறைக்க மடியாது என்பதற்கு நாம் மட்டுமே காரணம்.
ஆனால் என்ன தான் சொன்னாலும் அதற்கான ஒரு நிலையான திட்டம் வேண்டும் தானே அதை டாக்டர் ஷர்மிகா அறிவுரையுடன் கீழே பார்க்கலாம்.
3 மாத எடை குறைப்பு திட்டம்
1.முதல் விடயம் நாம் எந்த காரணத்திற்காகவும் கொடுக்கப்படும் இந்த டயட் திட்டத்தை விட்டுக்கொடுக்காமல் கடைபிடிக்க வேண்டும். வீட்டில் என்ன நடந்தாலும் நம் கட்டுப்பாட்டை விட்டு விடாமல் எப்படியும் 3 வேளை சாப்பிட போகிறோம் அதை முறைப்படி சாப்பிட்டால் நன்மை.
2.Short term Plan: குறிக்கப்பட்ட கால வரையறைக்குள் கொடுக்கபட்ட எடை குறைப்பு திட்டத்தை முடித்துவிட வேண்டும். இது மிக மிக முக்கியமான ஒரு விடயமாகும்.
3. கட்டாய உடற்பயிற்ச்சி: கண்டிப்பா ஒரு நாளைக்கு ஏதாவது உங்கள் வசதிக்கேற்ற உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும். சோம்பேறித்தனமாக “இல்லை நாளைக்கு செய்யலாம்“ என விட்டு விடாமல் அதை தொடர்ந்து பழக்கபடுத்தி கொள்வது முக்கியம்.
இதில் மிகவும் முக்கியமாக நீங்கள் அன்றைய நாள் சரியாக சாப்பிடவில்லை தண்ணீர் மட்டும் தான் குடிக்கிறீங்க அப்படி என்றால் மட்டும் உங்களுக்கு உடற்பயிற்ச்சி தேவை இல்லை. ஆனால் நன்றாக சாப்பிடும் நாள் உடற்பயிற்ச்சி செய்வது கட்டாயம்.
4.பசித்தால் பட்டியாக இரு: சிலர் அப்போது தான் சாப்பிட்டு இருப்பார்கள் ஆனால் கொஞ்ச நேரத்தில் பிரியாணி சாப்பிட வேண்டும் போல இருக்கும். பசிப்பது போல தோன்றும்.
இதற்காக வௌியே சென்று கண்ட உணவையும் வாங்கி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிட கூடாது. முதலில் உட்காந்து வேலை செய்வோருக்கு அடிக்கடி வரும் பசி பொய் பசி.
இந்த மதிரி பசி வரும் பொழுது நீங்கள் ஆரோக்கியமான சினேக்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம். அதாவது நிலக்கடலை, சலட்டுக்கள், வீட்டில் செய்த சிப்ஸ் இது போன்றவை.
இந்த படிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் நினைத்ததை விட மிகவும் ஆரோக்கிமாகவும் விரைவாகவும் உடல் எடை குறைந்தே தீரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |