தக்காளியை பச்சையாக சாப்பிடுங்க - உங்களுக்கு 10 நன்மைகள் கிடைக்கும்
தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எனவே பதிவை படித்து பச்சையாக தக்காளி சாப்பிடுவது சரியா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பச்சையாக தக்காளி சாப்பிடும் நன்மைகள்
தக்காளி நம் சமையலறையில் இருக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இந்த தக்காளியை வைத்து கறிகள், சாஸ்கள், சூப்கள் என பல வகை உணவு செய்யலாம்.
அனால் தக்காளியை அப்படியே பச்சையாக சாப்பிடும் போது அதில் அனைத்து சத்துக்களும் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும்.
இதை பச்சையாக அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் சிறிது உப்பு,ஒரு துளி எலுமிச்சை சாறு என்பவற்றை தெளித்து சாப்படலாம்.
இதனால் உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். இப்படி தக்காளியை பச்சையாக சாப்பிட்டால் எடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பதிவில் விரிவாக பார்ககலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி | தக்காளியில் நிறைய வைட்டமின் சி உள்ளது. பச்சையான தக்காளியில் அதிக வைட்டமின் சி உள்ளது. உடல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள். இந்த தக்காளியை ஒரு நாளைக்கு ஒன்று என சாப்பிடலாம். இதில் இருக்கும் லைகோபீன் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நிலைகளின் அபாயத்தைக் குறைப்பதில் பங்கு எடுக்கும். |
இதயத்திற்கு நல்லது | பச்சை தக்காளியில் கலோரிகள் குறைவாகவும், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்தும் உள்ளன இவை அனைத்தும் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. தக்காளியில் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் பொட்டாசியமும், தமனிகளைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியான லைகோபீனும் நிறைந்துள்ளன. |
தோல் பராமரிப்பிற்கு நல்லது | பளபளப்பான சருமம் வெண்டும் என்ற ஆர்வம் இருந்தால் ஒரு தக்காளியை பச்சைாக சாப்பிட்டு வாருங்கள். தக்காளியில் லைகோபீன், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் சரும சேதத்தை மெதுவாக்குவதற்கும் கொலாஜனை அதிகரிப்பதற்கும் உதவும். |
செரிமானத்தை எளிதாக்கும் | பச்சை தக்காளியில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்ததாக இருக்கும். இந்த சத்துக்கள் இயற்கையாகவே உங்கள் உடலை சுத்தப்படுத்த உதவுகின்றன. மேலும் தக்காளியில் உள்ள லேசான அமிலங்கள் உங்கள் வயிற்றில் சிறப்பாக ஜீரணம் செய்ய உதவும். இதனால் மலச்சிக்கல் இல்லாமல் போகும். |
நீரேற்றம் | தக்காளி 95% தண்ணீர். வெயில் காலங்களில்பச்சை தக்காளி துண்டுகள் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டால் அல்லது சாறாக பிளிந்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதை செய்தால் போதும் வெயில் காலத்தில் சொடா பழச்சாறு குடிக்க தேவை இல்லை. இந்த தக்காளிகளே உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். |
எலும்பிற்கு நன்மை தரும் | தக்காளியில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுப்படுத்த அமைதியாக உதவுகின்றன. மற்றும் வயதான காலங்களில் உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை லைகோபீன் இல்லாமல் செய்கிறது. |
கண்களுக்கு நல்லது | கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ உள்ளது. சிலருக்கு இருக்கும் மாலைக்கண் நோயிலிருந்து இது பாதுகாக்கும். மேலும் கண் சோர்வு மற்றும் கண்புரை போன்ற நீண்டகால பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கின்றன. நீங்கள் மணிக்கணக்கில் திரைகளில் செலவிடுகிறீர்கள் என்றால் தக்காளியை தவறாமல் சாப்பிடுங்கள். |
எடை கட்டுபாடு | எடை குறைக்க முயற்ச்சி செய்பவர்களுக்கு தக்காளி ஒரு சிறந்த தேர்வு. பசியாக இருந்தாலும் கலோரிகளைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? உங்களுககு தக்காளி சரியான சிற்றுண்டியாக இருக்கும். தக்காளி சாப்பிட்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். |
மனதுக்கும் நல்லது | தக்காளி உடலுக்கு உதவுவது மட்டுமல்லாமல், மனநிலையையும் பாதிக்கிறது. ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. உதாரணமாக, ஃபோலேட் மன அழுத்தத்துடன் தொடர்புடைய சேர்மங்களைக் குறைக்க உதவுகிறது. உணவில் பச்சை தக்காளியைச் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |