தினமும் 1 மணி நேரம் வாக்கிங் செல்லும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த நோய்கள் உங்களுக்கு வராது
ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி அவசியம். ஏனெனின் தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறையை சரிச் செய்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது.
ஒரு நாளில் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் - 1 மணி நேரம் வரை நடக்க வேண்டும். இதற்கு விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டியதில்லை. மாறாக மிதமான வேகத்திலும் நடக்கலாம்.
வயதானவர்கள் நாள்தோறும் 1 மணிநேரம் கட்டாயம் நடக்க வேண்டும். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.
அதே சமயம், நாள்பட்ட நோய்களின் பாதிப்புக்களும் இந்த பயிற்சியினால் கட்டுக்குள் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது.
அந்த வகையில், தினமும் 1 மணிநேரம் நடைபயிற்சி செய்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தினமும் வாக்கிங் செல்வதால் இவ்வளவு பலன்களா?
1. தினமும் 1 மணி நேரம் இடைவிடாமல் நடந்து செல்வதை சிறந்த கார்டியோ பயிற்சி என்கிறார்கள். ஒருவர் நாள்தோறும் 5000 காலடிகள் நடப்பது அவர்களின் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
2. வாக்கிங் செல்லும் ஒருவருக்கு உடல் பருமன் அவ்வளவாக இருக்காது. ஏனெனின் தினமும் ஒரு மணி நேரம் நடப்பதால் உடலில் உள்ள வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
3. தற்போது இருக்கும் அவசர வாழ்க்கையில், மனநிலையை மேம்படுத்தும் பயிற்சிகள் அவசியம். மன ஆரோக்கியத்தை சீராக வைத்து கொள்ள நினைப்பவர்கள் நல்ல தூக்கத்தை தினமும் தூங்க வேண்டும். இதற்கு நடைபயிற்சி உதவியாக இருக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் நடப்பதால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும். அதில் இதுவும் ஒன்று.
4. உங்களுடைய கீழ் உடலை மட்டுமல்லாமல் மேல் உடல் தசைகளையும் வாக்கிங் செல்வதால் குறைக்க முடியும். ஏனெனின் ரத்த ஓட்டம் நடைபயிற்சி செய்யும் நாட்களில் சீராக இருக்கும். இதனால் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். மாறாக தசைகளும் வலிமையாக்கப்படுகிறது.
5. தினமும் ஒரு மணி நேரம் நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அதிகமான ஆற்றல்கள் இருக்கும். அவர்கள் மற்றவர்களை விட சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |