Viral Video : செருப்பில் 1.2 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திய பயணி - கண்டுபிடித்த போலீசார்...!
செருப்பில் 1.2 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திய பயணியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1.2 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திய பயணி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
பெங்களூரு, பாங்காக்கிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த பயணி மீது போலீசார் சந்தேகப்பட்டனர். அப்போது, அவரை அழைத்துச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.
இதன் பிறகு, அவர் அணிந்திருந்த செருப்பில் சுமார் ரூ.69.40 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ எடையுள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | Gold weighing 1.2 kg worth Rs 69.40 lakh seized from a slipper of a passenger who arrived from Bangkok in Bengaluru by IndiGo flight: Customs pic.twitter.com/4dBwb5Dhpv
— ANI (@ANI) March 15, 2023