பிறந்தநாள் பார்ட்டியில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் மனைவியின் பிறந்த நாளில் செய்த விடயம் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வைரலாக்கப்பட்டு வருகின்றது.
மார்க் ஜூக்கர்பெர்க்
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த 2012 ஆம் ஆண்டு, பிரிஸில்லா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 3 மகள்கள் உள்ளனர்.
12 வருட திருமண வாழ்க்கையை பூர்த்தி செய்த மார்க் ஜூக்கர்பெர்க், அவருடைய மனைவி- பிரிஸில்லாவின் 40 ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு நெருக்கமானவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மார்க் ஜூக்கர்பெர்க் கிராமி விருது பெற்ற அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் அணிந்த ஆடை போன்று அணிந்து, அதன் மீது கருப்பு உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மனைவிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி
இந்த நிலையில், திடீரென மனைவி பிரிஸில்லாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஆடைகளை களைத்து பாடகரின் உடையில் நிகழ்ச்சியில் வலம் வந்தார்.
இவரின் இந்த செயல்களால் அளவில்லாத மகிழ்ச்சியடைந்த பிரிஸில்லா, நிகழ்ச்சி முழுவதும் சந்தோஷமாக இருந்தார்.
இந்த காணொளி, சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
