மிதுன ராசியில் புதன்... அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா?
புதன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெறும் நான்கு ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்தினால் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசன் என்று கருதப்படும் புதன் பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் இவற்றிற்கு காரணமாக இருக்கின்றார்.
மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாகவும் இருக்கின்றார். குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றும் கிரகம் ஆகும்.
தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில் நாளை கடக ராசிக்குள் நுழைய உள்ளார். கடக ராசியில் ஆகஸ்ட் 5ம் தேதி வரை பயணிக்கின்றார். இடைப்பட்ட காலத்தில் சில நாட்களுக்கு வக்ர நிலையடைந்து மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைந்து, கடகத்திற்கு நுழைகின்றார்.
இந்த கிரக பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தினை பெறும் நான்கு ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
இந்த பெயர்ச்சியினால் ரிஷப ராசியினருக்கு சிறப்பான காலமாக இருக்குமாம். ஊடகம், ஐடி இவற்றில் வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம். தங்களது பேச்சினால் மற்றவர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இந்த காலக்கட்டத்தில் குடும்பத்துடன் அல்லது தனியாகவோ ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும்.

கடகம்
கடன ராசியில் முதல் வீட்டிற்கு புதன் செல்ல உள்ள நிலையில், ஆளுமை மேம்படுவதுடன், மற்றவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பாடுகளும் இருக்குமாம்.
உங்களது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்பதுடன், தொழில் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் மற்றும் பண வரவு அதிகரிக்கும். பணியிடங்களில் செயல்திறன் மேம்படுவதுடன், உயர் அதிகாரிகளால் பாராட்டும் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 11வது வீட்டில் புதன் செல்ல உள்ள நிலையில், செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களது செயல்திறன் உயர் அதிகாரிகளை ஈர்க்கும் வகையில் இருக்குமாம்.
பதவு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதுடன், நிதி ரீதியான சிக்கலும் முடிவிற்கு வரும். பணம் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன், உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டும். யாரையும் நம்பவும் வேண்டாம்.

துலாம்
துலாம் ராசியின் 10வது வீட்டில் புதன் செல்லும் நிலையில், தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதுடன், இதன் மூலமாக எதிர்காலத்தில் அதிக பணத்தை சம்பாதிப்பீர்கள்.
பணி புரிபவர்களுக்கு புதிய திட்டத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்குமாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், பண வரவும் அதிகரிப்பதால், நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |