இந்த ராசிகள் முத்து அணிந்தால் தலை விதியே மாறுமாம் - உங்க ராசி இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிகள் முத்து அணிந்தால் அவர்கள் தலைவிதியே மாறும் என கூறப்பட்டுள்ளது.
முத்து அணியக்கூடிய ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ரத்தனம் உண்டு என கூறப்படுகின்றது. அந்த வகையில் சந்திரனுக்கும் ஒரு ரத்தினம் உண்டு அது தான் முத்து. சந்திரன் குளிர்ச்சிக்கு அதிபதியாக இருக்கிறார்.
முத்து மென்மையானது என்றாலும் சக்தி வாய்ந்தது. ஜோதிடத்தின்படி எந்த ராசிகளுக்கு சந்திரன் பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் முத்து அணிந்தால் அமைதியையும், செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெற முடியும் என கூறப்படுகின்றது.
யார் அந்த ராசிகள் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை செவ்வாய் பகவா ஆளுகிறார்.
இவர்களின் நான்காம் வீட்டின் அதிபதி சந்திரன். 4-ம் வீடு என்பது சுகபோகம், தாய், வாகனத்தை குறிக்கும் வீடாகும்.
இந்த ராசிக்காரர்கள் முத்து அணிவதால் நிலம், வீடு தொடர்பான சிக்கல்கள் தீரும். தாயுடன் உறவு பலப்படும். மன அழுத்தம் குறைந்து எப்போதும் ஒருவித புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள் என குறிப்பிடபட்டுள்ளது.
கடகம்
கடக ராசிக்கு அதிபதியாக இருப்பவர் சந்திர பகவான். இவர்களுக்கு முத்து அதிர்ஷ்டத்தின் சின்னம்.
நீங்கள் முத்து அதிகப்படியான கோபம் குறைந்து நிதானம் கிடைக்கும் இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் இக்கட்டான சூழலில் சரியான முடிவுக எடுப்பீர்கள்.
நீங்கள் முத்து அணிந்ததன் பின்னர் உங்கள் வாழ்க்கை முற்றிலுமாக மாறும் எனப்படுகின்றது.
விருச்சிகம்
அதாவது இந்த ராசியில் சந்திர பகவானின் பலம் முழுமையாக வெளிப்படாது. அவர் பலவீனமாக காணப்படுவார் என ஜோதிடப்படி கூறப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் மன குழப்பத்துடனும், தேவையற்ற பயத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் முத்து அணியும் போது எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தடைபட்ட நின்ற காரியங்கள் தடையின்றி நடக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி உடல் நலம் மேம்படும்.
மீனம்
மீன ராசிக்கு சந்திரன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக விளங்குகிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணியம், புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றை குறிக்கும் வீடாகும்.
நீங்கள் முத்து அணிந்தால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். மேலும் மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).