இந்த ராசியினர் யாருக்காகவும் இதை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்களாம்... நீங்க எப்படி?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் தனித்துவமான குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 12 ராசிக்களுக்கும் என குறிப்பிட்ட சில விசேட குணங்கள் இருக்கும். அப்படி ஒவ்வொரு ராசியினரும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள விரும்பாத விடயயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
மாற்ற முடியாத குணம்
மேஷம் - மேஷ ராசியிவ் பிறந்தவர்கள் என்ன நடந்தாலும் தங்களின் நம்பிக்கையை மட்டும் இழக்க மாட்டார்கள். இவர்கள் ஒரு முறை யார் மீதாவது நம்பிக்கை வைத்துவிட்டால் அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்களாம்.
ரிஷபம் - ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஒருபோதும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க மாட்டார்கள். சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் இவர்கள் சரியான முடிவை எடுப்பதற்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்வார்களாம்.
மிதுனம் - இந்த ராசியினர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள். இவர்கள் யாருக்காகவும் தற்களின் மகிழ்ச்சியை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்களாம்.
கடகம் - கடக ராசியினர் அன்பு வைத்தவர்களை எளிதில் மறக்க மாட்டார்கள். அதே போல் இவர்களை நேசிப்பவர்களுக்காக எந்த எல்லைக்கும் போக தயாராக இருப்பார்கள். இவர்கள் யாருக்காகவும் விரும்பியவர்களை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
சிம்மம் - சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்களை அவமானப்படுத்தியவர்களை ஒரு போதும் மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விடயத்தில் மிகவும் உறுதியாாக இருப்பார்கள்.
கன்னி - கன்னி ராசியினர் தவறுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். யார் பிழை செய்திருந்தாலும் அதனை தட்டிக்கேட்கும் குணத்தை மட்டும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.
துலாம் - துலாம் ராசியில் பிறந்தவர்கள் சண்டையை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக இருப்பார்கள். சுற்றியிருப்பவர்களுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்ற குணத்தை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றும் விடயத்தில் மிகவும் உறுதியானவர்கள். இந்த குணத்தை விட்டுக்கொடுக்க விரும்ப மாட்டார்கள்.
தனுசு - தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் யாருக்காகவும், எதுக்காகவும் தங்களின் சுதந்திரத்தையும் சுய மரியாதையையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
மகரம் - மகர ராசியினர் எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். தங்களின் பெயருக்கு தீங்கு விளைவிக்கும் விடயங்களை யாருக்காகவும் செய்யவே மாட்டார்கள்.
கும்பம் - கும்ப ராசியினர் தங்களின் முடிவுகளுக்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். யாருக்காகவும் தங்களின் திட்டங்களை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் யாரையும் எந்த காரணத்திற்காகவும் புண்படுத்தவே மாட்டார்கள். இவர்களுக்கு துன்பம் கொடுத்ததாலும் இவர்களின் இந்த குணத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |