காதலை வெளிப்படுத்த தயங்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் சிலர் காதல் விடயத்தில் எதிரில் இருப்பவர் என்ன பதில் கொடுப்பார் மற்றும் என்ன நினைப்பார் என்பது பற்றிய கவலையின்றி நான் உங்களை காதலிக்கின்றேன் என வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் காதலை காதலிப்பவரிடம் சொல்வதற்கு தயங்குவார்களாம்.
இவர்கள் நான் உங்களை காதலிக்கின்றேன் என்ற வார்த்தை பயன்படுத்தவே மிகவும் பயப்படுவார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே எல்லா விடயங்களிலும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் துணையிடம் காதலை வெளிப்படுத்த மிகவும் தயங்குவார்கள்.
ஒருவேலை மருப்பு தெரிவித்துவிட்டால் என்ன செய்வது என்ற சிந்தனை மேலோங்கி இருப்பதனால் இவர்களுக்கு காதலை வெளிப்படுத்துவது சவாலான விடயமாக இருக்கின்றது.
தனுசு
தனுசு ராசியினர் மிகவும் விசுவாசமான, நம்பகமான மற்றும் அன்பான துணையை உருவாக்குவார்கள். ஆனால், இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர்.இதனால் இவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் விடயங்களில் மிகவும் தயக்கம் காட்டுவார்கள்.
காதல் விடயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தாலும் சுதந்திரத்தின் மீது இருக்கும் அதீத ஈடுபாடு காரணமாக இவர்கள் காதலை வெளிப்படுத்த மிகவும் தயங்குகின்றனர்.
மகரம்
மகர ராசியினர் எப்போதும் தோல்வியை கண்டு பயப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் விரைவில் காதல் வயப்படக்கூடியவர்கள். ஆனாலும் காதலை வெளிப்படுத்தும் விடயத்தில் மிகவும் தயக்கம் காட்டுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் எப்போதும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் மனம் எந்நேரமும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும்.
இவர்கள் காதலிப்பவர்களிடம் காதலை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். காதலை வார்தையாக சொல்லாமல் வேறு வழிகளில் புரிய வைக்க முயற்சி செய்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |