இந்த ராசிக்காரர்கள் இந்த தெய்வத்தை வணங்கினால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் !
12 ராசிக்காரர்களும் எந்தெந்த தெய்வத்தை வணங்கினால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மிகவும் நிதானமாகவும் எதிலும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ள இவர்கள் எளிதில் ஏமாந்துவிடுவார்கள். ஆனாலும் மற்றவர்களுக்கு உதவுவதை வாழ்வில் தலையாய நோக்கமாக கொண்டவர்கள்.
செட்டிகுளம் எனும் இடத்திலிருக்கும் கரும்பாயிரம் எனும் செட்டிகுளம் முருகன் கோவில் ,இந்த கோவிலுக்கு மேஷ ராசிக்காரர் மட்டுமல்ல;ல அந்த ராசிக்கான லக்கினத்தில் இருப்பவர்களும் வணங்கலாம்.
ரிஷபம்
தெய்வாம்சம் பொருந்தியவர்கள். பிறர்க்கு உதவும் தன்மை பொருந்தியவர்கள். சிவபக்தரான நந்தி தேவருக்கு திருமணம் நடைபெற்ற இடம்,அரியலூரில் இருக்கும் திருமனப்பாடி எனும் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நல்ல மாற்றம் உண்டாகும்.
மிதுனம்
இவர்களுக்கு எதுவும் இலகுவில் சாதகமாக அமைந்துவிடாது.அப்படி முடிவெடுத்தாலும் அது கைகூடாமல் போய்விடும்.
இவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய இடம் கடலூர் மாவட்டத்திலிருக்கும் பெண்ணாகடம் எனும் கோவில். ஆலய ஈசன் ப்ரளயகாலேஸ்வரர்,அம்மன் அழகிய காதலி அம்மன்.இங்கு சென்று வழிபாடுபடுவது மிதுன ராசிக்கு சிறப்பு தரும்.
கடகம்
கடக ராசியில் ஆண்களை விட பெண்களுக்கே பாதிப்பு அதிகம். கடகராசியில் அனைவரும் செல்லவேண்டிய இடம் கும்பகோணத்தின் அருகிலிருக்கும் இருக்கும் திருதேவன்குடி. இன்றைய காலகட்டத்தில் இதற்கு நண்டாங்கோவில் என பெயர்.
நண்டு சிவனை வணங்கி சாபவிமோட்சனம் அடைந்த கோவில் இது என கூறுகின்றனர்.ஆகையால்,கடகத்திற்கு இது சிறப்பானதாக இருக்கும்.
சிம்மம்
அரசியல் மற்றும் ஆன்மீக பற்று கொண்டவர்கள். திருத்தணியில் ஒரு காட்டுபகுதி நடுவே 3 கி.மீ.தொலைவில் ப்ரத்யக்ரா எனும் பஞ்சமுக அம்மனின் கோவிலிற்கு சென்று வழிபட்டால் சிறப்பாக இருக்கும்.
சனி பகவானின் எப்பேர்ப்பட்ட தாகமாக இருந்தாலும் இந்த கோவிலுக்கு சிறப்பு.
கன்னி
ராசி வழிபடுவதற்கு சிறந்த கோவில் திருச்சி செல்லும் வழியில் இருக்கும் வாடாலூரின் அருகில் இருக்கும் ஊட்டத்தூறில் நடராஜரை வழிபட்டால் மிக சிறப்பு.
துலாம்
துலாம் ராசிக்காரர் முருகனின் விருத்தாச்சலம் அருகிலுள்ள கொழஞ்சிப்பர் ஆலயம் சென்று வழிபடுவது நன்மையை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் மென்மையான மனம் படைத்தவர்கள்.இவர்கள் வழிபடுவதற்கு சிறந்த இடம் 6 ஆடி உயரத்தில் இருக்கும் முருகன் சிலையை கொண்ட கோவிலான வாளிகண்டபுரம்.
இந்த லாக்கனியாம் உள்ளவர்களுக்கும் இது நற்பலன் கொடுக்கும்.
மகரம்
திருகோணம்,திருவாதிரை இந்த இரு நட்சத்திரக்காரர்களும் வணங்கக்கூடிய கோவில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலாகும்.
கும்பம்
சனி பகவானின் பாதிப்பில் இருக்கும் கும்பராசிக்காரர்களுக்கு,சிறப்பான கோவில் கும்பகோணத்தில் இருக்கும் நாகேஸ்வரன் கோவிலாகும்.
மீனம்
எப்பொழுதுமே மீன ராசிக்கு சிறப்பான கோவில்களான சமயபுரம் அம்மன் ஆலயத்தை காலையிலும்,முத்து மாரியம்மன் கோவிலை மாலையிலும் வழிபட்டால் சிறப்பானதாக அமையும்.