காதலில் தோல்வியை தழுவும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் காதல் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருப்பது இயல்பு தான். ஆனால் எல்லோருக்கும் காதல் வாழ்க்கை இனிமையானதாக அமைவது கிடையாது.
குறிப்பாக காதல் செய்யும் அனைவரும் வாழ்க்கை துணையாக அவர்களையே அடைவதும் கிடையாது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் காதலில் விரைவில் தோல்வியை தழுவுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
அப்படி காதல் வாழ்க்கையில் துரதிஷ்ட வசமாக தோல்வி காணும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் விரைவில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் அதிக கோபம் மற்றும் கவலை இவர்களை ஆக்கிரமிக்கும் போது தவறாக முடிவை எடுத்துவிடுகின்றார்கள்.
இவர்களின் அவசர குணத்தால், எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாமல் காதல் உறவையும் முறித்துக்கொள்கின்றார்கள்.
இந்த ராசியினர் எப்போதும் அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பதால், காதல் துணையிடம் கூட அதிகம் ஈகோ கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த குணம் இவர்கள் காதலில் தோல்வியடைய காரணமாக அமைந்து விடுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எந்த விடயத்திலும் விரைவில் சலிப்படையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒரே உறவில் நீண்ட காலத்துக்கு இருப்பதால், இவர்கள் அதில் ஆர்வம் இழக்க நேரிடும். இதனால் இவர்களின் காதல் துணை மனமுடைந்து காதல் உறவை முறித்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
இவர்கள் எப்போதும் புதிய அனுபவங்களை விரும்பும் இயல்புடையவர்களாக இருப்பதும் காதல் விடயங்களில் உணர்வு ரீதியான பிணைப்பு அற்றவர்களாக இருப்பதும் இவர்களின் காதல் தோல்விக்கு காரணமாக இருக்கின்றது.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.அவர்கள் எப்போதும் தங்களின் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்த ஆர்வம் அவர்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கின்றது. இவர்களின் துணை இவர்களை கட்டுப்படுத்த முயன்றால் கொஞ்சமும் யோசிக்காமல் இவர்கள் இந்த உறவை விட்டு வெளியேறுவார்கள்.
இவர்கள் தங்களின் நிம்மதிக்காக காதல் உறவை முறித்துக்கொள்ள சிறிதும் தயங்குவது கிடையாது. இவர்களின் இந்த குணம் காதலில் இவர்கள் தோல்வியை தழுவ காரணமாக அமைகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |