Zinc நிறைந்த இந்த உணவுகள் அவசியமானவை: கிருமிகளை எதிர்த்து போராடும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் (Zinc) என்று சொல்லப்படும் துத்தநாகம் சத்தும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகைய ஜிங்க் சத்து நாம் அன்றாட உணவுகளில் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது.
உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, ப்ரக்கோலி, காளான் மற்றும் பூண்டு போன்றவற்றில் கணிசமான அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது.
நமது அன்றாட உணவுகளில் இத்தகைய காய்கறிகளை அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம் ஜிங்க் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்.
இதுதவிர சணல் விதைகள், பூசணி விதைகள், பரங்கி விதைகள், தர்பூசணி விதைகள் போன்றவற்றிலும் குறிப்பிட்ட அளவில் ஜிங்க் சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
ஆகவே இது போன்ற விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் ஜிங்க் சத்தை அதிகரிக்க முடியும்.
மேலும் அன்றாடம் சமையல் செய்ய பயன்படுத்தும் பருப்பு வகைகளில் கொழுப்பு, கலோரிகள் குறைவாகவும், புரதங்கள் மற்றும் ஃபைபர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
ஒரு கப் பயறு வகைகளில் கிட்டத்தட்ட 4.7 மி.கி ஜிங்க் சத்தும், அரை கப் ஓட்ஸில் 1.3 மி.கி ஜிங்க் உள்ளது குறிப்பிடத்தக்கது.
