தனி ஜெட் விமானம் மற்றும்100 கோடி மதிப்புடைய பங்களாவை சொந்தமாக வைத்துள்ள நடிகை யாருனு தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தற்போதைய சொத்து மதிப்பு மற்றும் அவரின் வாழ்க்கை சம்பவங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஷில்பா ஷெட்டி
வெள்ளித்திரையில் கலக்கல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் இந்த இடத்தை பிடிப்பதற்கு பல துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார்.
எவ்வளவு துன்பப்பட்டாலும் தன் முயற்சியை மட்டும் விடாமல் போராடி தான் நினைத்த நிலைக்கு அடைந்துள்ளார் ஷில்பா ஷெட்டி. இவர் தனது வாழ்கையில் தான் பட்ட கஷ்டங்களை விளம்பரமாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது அவர் எவ்வளவு துன்பத்தை அடைந்தாரோ அதே அளவிற்கு இன்று அவரை ஒரு வலிமையான சுதந்திரப் பெண்ணாகவும், நடிகையாகவும், மனைவியாகவும், தாயாகவும் ஆக்கியுள்ளது என கூறினார்.
இவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். இவர்களுக்கு வியான் மற்றும் ஷமிஷா என இரு குழந்தைகள் உள்ளனர். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக ஷில்பா உள்ளார்.
ரூ.100 கோடி மதிப்பிலான பங்களா உள்ளிட்ட ஆடம்பர சொத்துக்களை வைத்துள்ள ஷில்பா ஷெட்டியிடும் ஜெட் விமானமும் சொந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |