விஜே சித்துவுக்கு அடித்த ஜாக்போட்- இயக்குநர் யார் தெரியுமா?
விஜே சித்துவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜே சித்து
தமிழ்நாட்டில் யூட்யூப் சேனல்கள் அதிகமாகி வருகின்றன. அதில், பிரபலமாக இருப்பவர் தான் விஜே சித்து.
இவர், பல ஊர்களுக்கு சென்று, அங்குள்ள சிறப்பு அம்சங்களை காணொளியாக செய்து பதிவேற்றி வருகிறார். இவருக்கு என தனிக்குழுவொன்று இருக்கிறது.
தொகுப்பாளராக அறிமுகமான விஜே சித்து சினிமா பிரபலங்களை வைத்து நிகழ்ச்சியொன்றும் செய்து வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் விஜே சித்து பிரதீப் ரெங்கநாதனுடன் இணைந்து டிராகன் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜே சித்துவுடன் இணைந்து ஹர்ஷத்தும் நடித்திருக்கிறார்.
அதற்கு முன்னர், சித்து ட்ரிப் என்ற படத்திலும் ஹர்ஷத் கான் ப்ளாக் ஷிப் என்ற படத்திலும் நடித்தார்கள். ஆனால் பெரிதாக வரவேற்பு இல்லை.
ஜாக்போட்
இந்த நிலையில், விஜே சித்து குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே சித்து ஒரு படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், படத்தின் அறிவிப்புக்காக ஒரு ப்ரோமோ ஷூட்டையும் நடத்தினார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் நெட்டிசன்கள் மகிழ்ச்சியுடன் செய்தியை வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |