கணவருடன் சேர்ந்து ஆபாச பேச்சு: யூடியூபர் மதனின் மனைவியை கைது செய்த போலீசார்
யூடியூபர் மதன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரின் மனைவியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் விளையாட்டு மூலமாக சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், சிறுவர், சிறுமியரை மிரட்டி பணம் பறித்ததாகவும் யூடியூபர் மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதுவரையிலும் 159 புகார்கள் வந்துள்ள நிலையில், மதனை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தலைமறைவான மதன் சார்பில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கணவருடன் சேர்த்து மதனின் மனைவி கீர்த்திகாவும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளதால் அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மேலும் மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், சேனலை நிரந்தமராக முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.