இணையம் இல்லாமல் யூடியூப் காட்சியினை பார்க்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
Youtube காணொளிகளை இணையம் இல்லாமல் எப்படி பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Youtube காணொளி
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கின் சிறந்த தேர்வாக யூடியூப் இருக்கின்றது. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள் என அனைத்தையும் அமர்ந்த இடத்தில் நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் யூடிப்பில் காணலாம்.
இவ்வாறு பயனர்களுக்கு மிகவும் முக்கியமான காணொளி தளமாக இருக்கும் இதில் அவ்வப்போது புதிய அம்சமும் வெளியாகி வருகின்றது.
இந்த டிஜிட்டல் யுகத்தில், இணையம் இல்லாமல் வாழ்வது பெரும்பாலான மக்களுக்கு கடினமான காரியமாக இருக்கின்றது ஆனால் இணையம் இல்லாமலும் யூடியூப் காணொளிகளை அவதானிக்கலாம்
இதற்காக பணம் எதுவும் செலுத்த வேண்டுமா? என்று நினைக்கிறீர்கள் என்றால் இல்லை என்பதே பதில். ஆம் எந்த பணமும் செலுத்த வேண்டியதில்லை. அப்படியெனில் யூடியூப் காட்சிகளை இணைய சேவை இல்லாமல் எப்படி அவதானிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இணையம் இல்லாமல் எப்படி பார்ப்பது?
இணையம் இல்லாம் யூடியூப்பலிருந்து காணொளியினை பதிவிறக்கம் செய்தால் இலகுவாக பார்க்கலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்தால் ஆஃப்லைனில் பார்க்கலாம்.
மேலும் இணைய சேவை முடிந்துவிட்டாலோ, நெட்வொர்க் பிரச்சனை உள்ள இடங்களில் கூட பதிவிறக்கம் செய்த காணொளியினை எந்தவொரு தடங்கல் இல்லாமல் பார்க்கலாம்.
அதாவது யூடியூப் காணொளியினை அவதானிக்கும் போது கீழே Download என்ற விருப்பம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் தொடுவதன் மூலம் காணொளியினை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனால் சில காட்சிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில், நீங்கள் YouTube பிரீமியத்திற்கு குழுசேர வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |