5 வகை வீடியோக்களுக்கு தடை விதித்த யூடியூப்! யாருக்கு வருவாய் பாதிக்க வாய்ப்புள்ளது?
யூடியூப் காணொளி தளத்தின் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் சில புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக உண்மைத்தன்மை இல்லாத ஸ்பேம் கன்டென்ட், மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் ஒரே கன்டென்ட்கள் அடையாளம் காணப்படும் என அறியப்படுகின்றது.
எனவே AI உருவாக்கிய அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வீடியோக்களைப் பதிவேற்றினால், அவதானத்துடனுடன் இருக்க வேண்டும்.
யூடியூப் பார்ட்னர் புரோகிராம்
இதனால் யூடியூப் தளத்தில் பதிவிடும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு மானிடைசேஷன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் புது சிக்கல் வரகூடும் என எதிர்வுகூறப்படுகின்றது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்தான் யூடியூப் என்பது அனைவரும் அறிந்ததே. உலகளவில் 200 கோடிக்கும் மேலான மக்கள் இந்த சேவையை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு தரப்பினர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் சம்பாதித்து வருகின்றனர்.
யூடியூப் தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளிலும் வீடியோக்களை பார்க்க முடியும். யூடியூப் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவு செய்யும் வீடியோக்களுக்கு அதன் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கை யூடியூப் வழங்கி வருகின்றது.
அது யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில்தான் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் புதிய அப்டேட்டில் சில புதிய விதிமுறைகள் உள்ளடக்கப்ட்டுள்ளன. இந்த புதிய விதிகள் குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய விதிமுறைகள் என்னென்ன?
மறுபயன்பாட்டு உள்ளடக்கம்
ஒரே கருப்பொருள் கொண்ட காணொளியை மீண்டும் மீண்டும் பதிவேற்றுதல் அல்லது ஏற்கனவே பதிவேற்றிய காணொளியில் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்வது . இப்போது மறுபயன்பாட்டு உள்ளடக்கமாகவே எடுத்துக்கொள்ளப்படும். யூடியூப் இதை 'குறைந்த முயற்சி' உள்ளடக்கமாகக் கருதி அதற்கான வருவாய் ஈட்டலை நீக்கும் வாய்ப்பு காணப்புடுகின்றது.
AI உருவாக்கிய உள்ளடக்கம்
உங்கள் காணொளிகளில் ஸ்கிரிப்ட், குரல் மற்றும் காட்சிகள் அனைத்தும் AI-யால் உருவாக்கப்பட்டு, மனிதத் முயற்சி இல்லையென்றால், மனித உழைப்பின்றிய காணொளியாக கருதப்படும். அதற்கும் யூடியூப் வருவாயில் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் வருமானம் வழங்காது.
மீண்டும் மீண்டும் வரும் பின்னணி வீடியோ
பட ஸ்லைடுஷோ, லூப் காணொளிகள் அல்லது பின்னணியில் மீண்டும் மீண்டும் ஒரே கிளிப்பை பயன்படுத்துவது யூடியூப்பின் பார்வையில் 'ஸ்பேமிங்' என்று கருத்தில் கொள்ளப்படும். இதனால் உங்கள் சேனலின் வருவாய் வழங்ப்படமாட்டாது.
தவறான தகவல் பகிர்வு அல்லது அதரமற்ற தகவல்
முழுமையாக ஆராய்ச்சி செய்யப்படாத அல்லது AI உருவாக்கிய கோட்பாடுகள் மற்றும் தவறான தலைப்பு அல்லது சிறுபடம் இப்போது யூடியூப்பின் புதிய வழிகாட்டுதல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளின் பிரகாரைம் நீங்களும் இதைச் செய்தால் உங்கள் சேனலை யூடியூப் நிறுவனம் தடை செய்யவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
முகம் இல்லாத சேனல்கள்
குறிப்பாக உங்கள் சேனல் தானியங்கி கொணொளிகளையோ அல்லது பொது அறிவு, போட் குரல் மற்றும் எந்த ஒரு தனித்துவமான மனித தொடுதலும் இல்லாத காணொளிகளை மட்டுமே பதிவேற்றினால், அந்த சேனலும் தடைசெய்யப்புடும் அபாயம் காணப்படுகின்றது.எனவே இந்த விதிகளை நன்றாக அறிந்துக்கொண்டு அதனை பின்பற்றினால், வருவாயில் எந்த சிக்கலும் ஏற்படாது.
YouTube சேனல்கள் என்ன செய்ய வேண்டும்?
மொத்தத்தில், கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்கள் மூலம் பார்வையாளர்களுக்கு கன்டென்ட்டை தனித்துவமாகவும், ஈர்க்கும் வகையிலும் அசல் தன்மையுடன் வழங்க வேண்டும் என யூடியூப் தளம் எதிர்ப்பார்க்கின்றது.
எனவே உங்கள் ஸ்கிரிப்டை முறையாகவும் தனித்துவமான பாணியிலும் நீங்களே எழுதுங்கள் அல்லது ஒரு மனித எழுத்தாளரை பணியில் அமர்த்துங்கள்.
காணொளிகளில் சொந்தக் குரலைப் பயன்படுத்துங்கள் அல்லது ஒரு குரல் கலைஞரைப் வைத்து காணொளியை தயார் செய்யுங்கள்.
ஒவ்வொரு காணொளியிலும் புதிய மற்றும் மதிப்புமிக்க தனித்துவமான தகவல்களை வழங்குவதை உறுதிசெய்துக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |