இளைஞர் செய்த டிக் டாக்! தூக்கி வீசிய ரயில்... அதிர்ச்சி காட்சி
டிக் டாக் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் எடுத்த ரிஸ்க் அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் செய்த இளைஞர்
இன்று டிக் டாக் என்பது மிகவும் பிரபலமாக காணப்படுகின்றது. தற்போதுள்ள இளைஞர்கள், பெரியவர்கள் தங்களது திறமையினை டிக் டாக் வாயிலாக காணொளியாக வெளியிட்டு இணையத்தில் பிரபலமாகி வருகின்றனர்.
இவை திறமைகளை வெளிக்கொண்டு வரும் என்றாலும், பல நேரங்களில் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பதை குறித்த காணொளியில் காணலாம்.
குறித்த காணொளியில் இளைஞர் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பு டிக் டாக் செய்து கொண்டிருந்த தருணத்தில், இதனை காணொளி எடுத்தவர்கள் அவரை எச்சரித்தும் அதனை கண்டுகொள்ளாமல் வந்துள்ளார்.
இந்நிலையில் ரயில் குறித்த நபரின் மீது மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகி விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றது.
How not to make a TikTokpic.twitter.com/jIPJOpZDoa
— Vicious Videos (@ViciousVideos) May 6, 2023