நண்பனை கொன்று இதயத்தை வெளியே எடுத்த இளைஞர்! பின்னணி காரணம் தான் என்ன?
தெலுங்கானா மாநிலத்தில் தனது காதலிக்கு தொல்லை கொடுத்த நண்பனை காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் பிரச்சினை
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவராக இருந்தவர் நவீன். இவரது நண்பர் ஹரிஹர கிருஷ்ணா. இருவரும் ஒரே வகுப்பில் படித்துவரும் நிலையில், ஒரே பெண்ணை காதலித்தும் வந்துள்ளார்.
ஆனால் குறித்த பெண் நவீனின் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திடீர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தும் விட்டனர்.
சில தினங்களுக்கு பின்பு குறித்த மாணவியிடம் ஹரிஹர கிருஷ்ணா காதலை வெளிப்படுத்திய நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. நவீன் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ள நிலையில், அப்பெண் காதலன் ஹரிஹர கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் நண்பன் நவீனை கொலை செய்ய திட்டமிட்டு, மூன்று மாதங்கள் காத்திருந்த நிலையில், ஹரிஹர கிருஷ்ணா நவீனை தனது வீட்டிற்கு அழைத்து வந்ததுடன், கல்லூரி விடுதியில் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் செல்லும் வழியில் இடையேில் இருசக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்திய நிலையில், மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதில் ஹரிஹர கிருஷ்ணா நவீனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். மேலும் அவரை துண்டு துண்டாக வெட்டி இதயத்தையும் எடுத்துள்ளார்.
இதனை புகைப்படமாக எடுத்து தனது காதலிக்கும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஹரிஹர கிருஷ்ணா பல நாட்கள் கழித்து பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.