சுகர் நோயாளிகளே! உயிருக்கு ஆபத்தான அளவு சர்க்கரை அதிகரித்துவிட்டது என்பதை எப்படி அறிவது?
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிக பெரிய ஆபத்து நீரிழிவு நோய்.
உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம்.
ஆனால் உடலில் நீரிழிவு நோயை உடனடியாக விரட்டும் அளவுக்கு எந்த உணவும் இல்லை.
இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறையாமல் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதிகரித்த இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது சவாலானது.
இரத்த சர்க்கரை அளவு
உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் ஒரு நிலை.
இது பொதுவாக உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும்போது அல்லது உடலால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது நிகழ்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 180 முதல் 200 மில்லிகிராம்களுக்கு மேல் செல்கிறது (எம்ஜி/டிஎல்).
சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?
ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், அது உடலில் அறிகுறிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.
அப்படி வெளிப்படும் அறிகுறிகளை உடனே கவனித்து சரியான சிகிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை, வாந்தி, அதிக பசி மற்றும் தாகம், விரைவான இதயத் துடிப்பு, பார்வைக் கோளாறுகள் மற்றும் பிற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
இந்த அறிகுறிகள் விரைவான நடவடிக்கை தேவைப்படும் அவசரநிலையை குறிக்கும்.
இம்மாதிரியான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்ததால், உடனே இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். அதோடு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் எடுக்க வேண்டும்.
இல்லையெனில் நோயாளி கோமா நிலைக்குச் செல்லலாம். அதிர்ஷ்டவசமாக, சில உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.
மரணத்தைக் கூட உண்டாக்கும்!
இரத்த குளுக்கோஸ் கணையத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, இன்சுலினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் இருந்தால் தான் சர்க்கரை நோய் ஏற்படும். இது கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மருத்துவ நிலை.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது வாழ்நாள் முழுவதும் இருக்கும். இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கும் போது அது உடலில் மோசமான சேதத்தை உண்டாக்குகிறது.
தீவிர நிலையில் மரணத்தைக் கூட உண்டாக்கும். எனவே இதைத் தவிர்க்க, சர்க்கரை நோயாளிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உடலின் பிற உறுப்புக்களை எப்படி பாதிக்கிறது?
சிறுநீரகம் - சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும்.
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்தால், டயாலிசிஸ் தேவைப்படலாம் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். மொத்தத்தில் உயர் இரத்த சர்க்கரை சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
கண்கள் - சர்க்கரை நோய் பார்வை திறனை மோசமாக்கி, தீவிர நிலையில் பார்வை இழப்பை உண்டாக்குகின்றன. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், கண் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயானது கண்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துவதால், கண்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.
பாதம் - பாதத்தில் உள்ள நரம்புகளின் சேதத்தால் உருவாவது தான் கால்களில் உணர்வின்மை அல்லது மரத்துப் போதல்.
இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சர்க்கரை நோயானது இரத்த நாளங்களை தடிமனாக்கி, கால்களில் இரத்த ஓட்டத்தை மோசமாக்குகிறது. ஒருவருக்கு அடிக்கடி கால்கள் மரத்துப் போனால் அதை சற்றும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இதயம் - சர்க்கரை நோய் இருந்தால், இதய நோய்கள் உருவாவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. உயர் இரத்த சர்க்கரை இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மாரடைப்பு மற்றும் பிற இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
சருமம் - பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் சரும பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம் உயர் இரத்த சர்க்கரையால் இரத்த நாளங்கள் சேதமடைந்திருப்பது தான். இரத்த நாளங்களின் சேதத்தால் தான் சருமத்தில் கருமையான படலங்கள் உண்டாகின்றன.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகளின் கழுத்து, கைகள், கால்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கருமையான படலங்கள் காணப்படுவதே சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாகும். இது வலியற்றது மற்றும் அரிப்பில்லாதது. ஆனால் இதை எளிதில் கண்டறிய முடியும்.
சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
ஆபத்துக்களை தடுக்க அறிகுறிகள் தென்படும் போது உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர எளிதான வழி நிறைய தண்ணீர் குடிப்பதாகும்.
தினசரி நீர் உட்கொள்ளும் அளவு சாதாரணமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
உடலில் இருந்து நச்சுகள் மற்றும் இன்சுலினை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு தண்ணீர் உதவுகிறது.
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது உங்கள் சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து இன்சுலினை அகற்றுவதை கடினமாக்குகின்றன. மேலும், இரத்த சர்க்கரை அளவு அதே நிலையில் இருக்கும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா என்பதை அறிவது எப்படி ?
உயர் இரத்த சர்க்கரையின் பல நுட்பமான அறிகுறிகள் உள்ளன. நீங்கள் அந்த அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவான அறிகுறிகள்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- அதிகரித்த தாகம்
- மங்கலான பார்வை
- சோர்வு
- தலைவலி
நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஹைப்பர் கிளைசீமியா என்பது பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பார்க்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரு சிறிய ஸ்பைக்கை சரியான நேரத்தில் அடையாளம் காணப்பட்டால் எளிதாக நிர்வகிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல், ஏதேனும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்கவும்.
நீரிழிவு நோயாளி கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டியவை?
- 25 கிராம் குளுக்கோஸ் மாவு
- சாக்லேட்
- மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.
உடனடியாக சுகரை குறைக்கும் 5 உணவுகள்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில உணவு பொருட்கள்
முட்டை

கீரை, பச்சை காய்கறிகள்

சிட்ரஸ் பழங்கள்
அவகேடோ

புளித்த உணவுகள்
