திருமண நிகழ்வில் நடனமாடிய இளம்பெண்! திடீரென சுருண்டு விழுந்து பலியான சோக காட்சி
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனமாடிய இளம்பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் இளம்பெண் நடனம்
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ்(23). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு சென்றுள்ள நிலையில், அங்கு கையில் தாம்பாழ தட்டை வைத்துக் கொண்டு நடனமாடிக் கொண்டு வந்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மணிப்பால் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்திற்கு பின்பு இளம் வயதினர் அதிகமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து வருகின்றனர். அதனால் உணவு பழக்கவழக்கத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்ள அறிவறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! pic.twitter.com/YhuvtKVfHL
— Prem ? இரா. பிரேம்குமார் (@premjourn) November 25, 2022