டீக்கடையில் வந்து மாட்டிக்கொண்ட இளைஞர்... லண்டனில் இருந்து வந்தவரா இவர்? புலம்பெயர் தமிழர்களிடம் சிக்கி நடப்பதைப் பாருங்க
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பொதுவாக டீ கடை என்று சென்றாலே நமக்கு தெரியாத பல விடயங்களை அங்கே தெரிந்து கொண்டு வரலாம்.
காரணம் அங்கு பலரும் கூடி டீ அருந்துவது மட்டுமின்றி நாட்டு நடப்பினையும், மற்றவர்களின் பிரச்சினையையும் பழக்கம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இங்கு டீ கடையில் லண்டனில் வந்த இளைஞரைப் பிடித்து கதைக்கும் காட்சியே இதுவாகும்.
பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் என்றால் மிகவும் அதிகமாக அலப்பறை கொள்வார்கள். வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வருவதை விட ஆங்கிலம் தான் அதிகமாக வரும் என்பதை நாம் அவதானித்திருப்போம். இங்கு லண்டனில் இருந்து வந்த இளைஞர் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் இருப்பதுடன் மிகவும் அழகாக தமிழில் கதைத்து அசத்தியதுடன் பல ஆச்சரியத்தினையும் கொடுத்துள்ளார் அதை இங்கே காணலாம்.