எத்தனை பேர் வந்தாலும் தன்மானத்தோடு எதிர்த்து நில்! மீண்டும் இளம் ஹீரோவாக வலம் வரும் ஆரி
எத்தனை பேர் சேர்ந்து உன்னால் முடியாது என்று தலையில் தட்டி உட்கார வைத்தாலும் தன்மானத்தோடு எதிர்த்து நிற்க வேண்டும் முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளவே கூடாது என்று பிக்பாஸ் ஆரி அவருடைய ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை வீடியோவை வெளியிட்டிருக்கிறார். பிக்பாஸில் மட்டுமல்ல மக்களின் மனதையும் ஜெயித்த ஆரி பேசிய வீடியோவை பார்த்த அவருடைய ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள்.
விவசாயத்தின் காவலனாகவும் தற்போது இளைஞர்களின் இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆரிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி ஆரி என்றால் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகிவிட்டார். இவருடைய பேச்சை கேட்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் ஒரு கூட்டம் தவமாய் தவமிருந்து அவர் லைவில் வந்து எப்போது பேசுவார் என்று காத்திருந்தது.
ஆனாலும் ஒவ்வொரு ரசிகர்களின் கமெண்ட்களுக்கும் பதில் அளித்து கொண்டிருக்கிறார் .அதில் பலர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் உங்களால் மறக்க முடியாத ஒரு முமண்ட் என்றால் என்ன என்று சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நான் என் மனைவிக்கு முதல் முறையாக கடிதம் எழுதியது என்று கூறியிருக்கிறார். எப்போதும் எப்படி சிரித்த முகமாகவும் பலபேர் எதிர்த்து உங்க எதிரே நிற்கும் போது நீங்கள் தனி ஆளாக துணிந்து நிற்கிறீர்கள்என்று கேட்டு வருகிறார்கள்.
அதற்கு அது பல வருடங்களாகவே நான் கஷ்டப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் அடிபட்டு ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டது .இந்த வீட்டிற்குள் இருந்த அனைவரும் எனது கேரக்டரை உங்கள் முன்பு காட்டியிருக்கிறார்கள். அதனால் நான் அவர்களுக்கு எப்போதுமே நன்றி கூறுவேன் என்று சிரித்த முகமாகவே கூறியிருக்கிறார். உண்மைதான்.. இந்த குணம்தான் இவரை பிக் பாஸாக்கியுள்ளது.