இந்த காய்கறிகளை மட்டும் வெட்டிய உடனே சமைக்காதீர்கள்... பெரிய ஆபத்து வரும்.
எந்தெந்த காய்கறிகளை வெட்டிய உடனே பயன்படுத்தக் கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.
காய்கறிகள்:
காய்கறிகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து என பல நன்மைகள் இருக்கின்றது.
அதாவது எதிர்காலத்தில் வரக்கூடிய இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவுகின்றது.
முக்கியமாக பெற்றோர்கள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை அவதானித்தால் அவர்களும் சாப்பிடுவார்களாம். அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை நாம் வெட்டிய உடனே பயன்படுத்தக் கூடாது. அந்த காய்கறிகள் என்னவென்று இங்கு கீழே பார்ப்போம்.

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி
இந்த காய்கறிகளை நாம் பயன்படுத்துவதற்கு முன் நன்கு கழுவி பின் பயன்படுத்த வேண்டும். இதை நாம் சிறிய துண்டுகளாக வெட்டி வெளியே வைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. இதை 30 -40 நிமிடம் கழித்து பயன்படுத்த வேண்டும். நாம் இப்படி செய்யும் போது இது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அது மட்டுமின்றி இதில் உள்ள ல்போரஃபேன் அதிகரிப்பதால் நமக்கு புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பூண்டு
நாம் அன்றாட பயன்படுத்தும் பூண்டையும் உடனே சமைக்கக்கூடாது. இதை நாம் எப்போதுமே தோலை நீக்கியோ அல்லது பொடியாக நறுக்கி அப்படியே பயன்படுத்துவோம். ஆனால் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் இதையும் நாம் 10-15 நிமிடம் கழித்து தான் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்துவதால் இதில் உள்ள அல்லிசின் அதிகரிக்குமாம்.
வெங்காயம்
வெங்காயத்தையும் வெட்டிய உடனே பயன்படுத்த கூடாது. ஆனால் நம்மில் பலர் அப்படி செய்யக்கூடாது என்று நினைப்போம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சல்பர் பொருட்களால் தான் நம் வெட்டும் போது நம் கண்களில் இருந்து தண்ணீர் வடிகிறது. இதனால் நம் கண்ணில் இருக்கின்ற கிருமிகள் வெளியேறுகின்றன. ஆனாலும் நாம் இதை உடனே பயன்படுத்தக் கூடாது. இதை நாம் 10 நிமிடம் கழித்து தான் பயன்படுத்து வேண்டும், நாம் இப்படி பயன்படுத்தும் போது மாரடைப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலே கூறிய காய்கறிகளை செக்கு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அது மட்டுமின்றி இந்த காய்கறிகளை குளிர்சாதணப் பெட்டியிலும் வைக்கக்கூடாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |