நீங்க போனை எந்த மாதிரி பயன்படுத்துவீங்க... இதுல கூட உங்க குணத்தை தெரிஞ்சிக்கலாம்
ஒருவர் போனை கையில் பிடித்துக் கொள்ளும் விதம் கூட அவர்களின் குணங்களை வெளிக்காட்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு நபர் மொபைல் போனை பயன்படுத்தும் விதம் மற்றும் அந்நபர் முடிவெடுக்கும் திறன், அவர்களின் குணங்கள், அவற்றின் ஆளுமை இவற்றினை தெரிந்து கொள்ள முடியும்.
போன் பிடிக்கும் விதமும், ஆளுமை பண்பும்
நீங்கள் ஒரு கையினால் போனை பிடித்துக் கொண்டு பெருவிரலால் அதனை கையாளும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்த நபராக இருப்பீர்கள். எதிலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நீங்கள், தன்னம்பிக்கை, புத்திசாலித்தானத்துடன் செயல்படுவீர்கள். உணர்ச்சிகளை ஆழமாக உணரும் நீங்கள், மற்றவர்களை ஊக்கமளிக்கும் வகையில் பேசும் ஆற்றலையும் கொண்டிருப்பீர்கள்.
இரண்டு கைகளால் போனை பிடித்து ஒரு கையின் பெருவிரலால் போனை கையாளர்பவர்களாக இருந்தால், நீங்கள் எளிமையான நபராகவும், எதையும் ஒழுக்கமாக செய்யவும் நினைப்பீர்கள். வீட்டில் ஒருமுடிவை எடுக்கும் முன்பு அனைவரது விருப்பங்களையும் கேட்டு அதன் பின்பு செயல்படுவதுடன், பணியிடத்திலும் திறமைகளால் பிரகாசிப்பீர்கள். உங்கள் நிலையான மற்றும் சிந்தனைமிக்க அணுகுமுறை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
இரண்டு கைகளால் போனை பிடித்துக் கொண்டு, இரு கட்டைவிரலால் பயன்படுது்தினால், நீங்கள் சிறப்பான செயல்திறனை கொண்டிருப்பீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஆற்றலையும் கொண்டிருப்பதுடன், தேவையில்லாத விடயங்களில் நேரத்தை வீணடிக்கவும் மாட்டீர்கள். எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையாக இருந்தாலும், அதனை அமைதியாக கையாண்டு, பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், சரியான வேலையை முடிக்க செய்வதில், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.
ஒரு கையினால் போனை பிடித்துக் கொண்டு மற்றொரு கையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்தி போனை பாவித்தால், நீங்கள் தனிமை விரும்பியாகவும், முடிவுகளை எடுக்கும் முன்பு ஆழ்ந்து சிந்திக்க அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்வீர்கள். உங்களின் தனித்துவமான கண்ணோட்டம் அலுவலகத்தில் உங்கள் வேலையை தனித்து காட்டும். உலகத்தை வித்தியாசமாகப் பார்க்கும் உங்களின் திறமையால் தொழிலில் பல வெற்றிகளைப் பெறும் நீங்கள், மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் பாதிப்படைய மாட்டீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |