800 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அசம்பாவிதம்! வெடிக்கும் எரிமலைக்கு முன் துள்ளி விளையாடும் இளைஞர்கள்....விழிப்பிதுங்க வைக்கும் காட்சி
ஐஸ்லாந்தில் வெடிக்கும் எரிமலைக்கு முன் இளைஞர்கள் கைப்பந்து விளையாடிக்கொண்டிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பின்னணியில் எரிமலை வெடித்து தீ குழம்பை வெளியிடுகிறது.
அதே சமயம், 6 பேர் கைப்பந்தை ஒருவருக்கொருவர் கை மாற்றி விளையாடி கொண்டுள்ளனர்.
View this post on Instagramஐஸ்லாந்தின் தலைநகரமான ரெய்காவிக் நகரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஃபாக்ராடல்ஸ்ஃப்ஜால் எரிமலை. இது கடந்த மார்ச் 19 -ம் தேதி அன்று வெடித்து தீ குழம்புகளை வான் அளவிற்கு பரப்பியதால், வானமே சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது. ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம், சமீபத்திய வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய அளவு நில நடுக்கம் ஏற்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் மார்ச் 19-ம் தேதி இரவு 8:45 மணியளவில் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதாக கூறினர். மேலும் 800 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் ஏற்பட்ட முதல் எரிமலை வெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக, எரிமலை வெடிப்பு மக்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தவில்லை.
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US