தோழி இறந்தது கூட தெரியாமல் சிகிச்சையில் யாஷிகா! வெளியான உண்மையால் சோகத்தில் ரசிகர்கள்
நடிகை யாஷிகாவின் தோழி இறந்ததது கூட தெரியாமல் சிகிச்சை பெற்று வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம்வரும் யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் சென்ற போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இவரது தோழி பவானி உயிரிழந்தார்.
யாஷிகா பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது தோழியின் உடலை பொலிசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நெஞ்சை உருக்கும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவுக்கு அவரது உயிர் பவானி இறந்தது பற்றி தகவல் தெரியாதாம்.
இன்னும் பவானி சிகிச்சை பெற்று வருகிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாராம் யாஷிகா. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.