குழந்தை பிறந்து ஒரே ஆண்டில் XL-ல் இருந்து M சைஸுக்கு மாறிய ஜாய் கிரிசில்டா! எப்படி?
குழந்தை பிறந்த பின்னர் ஒரே ஆண்டுக்குள் XL ஆடை அளவில் இருந்து M அளவுக்கு மாறியுள்ளதாகப் பிரபல ஆடை வடிவமைப்பாளரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். தனது இந்த உடல் மாற்றத்திற்கான காரணத்தையும் அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜாய் கிரிசில்டாவின் பதிவு
ஜாய் கிரிசில்டாவுக்கும் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பிறந்த ராகா ரங்கராஜின் முதல் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், குழந்தை பிறந்த பின்னர் இவ்வளவு விரைவாக உடல் எடையைக் குறைத்தது எப்படி எனப் பலரும் தன்னிடம் கேட்பதாக ஜாய் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த அவர், தனியார் கிளினிக் ஒன்றில் எடை குறைப்பு மற்றும் உடல் வடிவமைப்புக்கான பிரத்யேக சிகிச்சையைப் பெற்றதாகவும், இரண்டு முதல் மூன்று வாரங்களிலேயே நல்ல மாற்றங்களைக் காண முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் எடுத்துக்கொண்ட சிகிச்சை FFT (Fat Freezing Treatment) எனப்படும் கொழுப்பைக் குறைக்கும் சிகிச்சை என்றும் தெரிவித்துள்ளார். இது மருத்துவ ரீதியாக Cryolipolysis என அழைக்கப்படுகிறது.
Fat Freezing சிகிச்சை என்றால் என்ன?
இந்தச் சிகிச்சை மூலம் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள பிடிவாதமான கொழுப்பைக் கட்டுப்படுத்தப்பட்ட குளிர்ச்சியைப் பயன்படுத்திக் குறைக்க முடியும். குறிப்பாக வயிறு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளின் உடல் வடிவத்தை மேம்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இந்தச் சிகிச்சை உடல் முழுவதும் எடையைக் குறைப்பதற்கான வழிமுறை அல்ல. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்கான சிகிச்சை மட்டுமே பெரும்பாலும் பலனளிக்கும். உடல் பருமன் பிரச்சினைக்கோ, ஒட்டுமொத்த உடல் எடை குறைப்புக்கோ இது தீர்வாகாது.

அது மாத்திரமின்றி குளிர்ச்சியால் ஒவ்வாமை ஏற்படுபவர்கள், சில ரத்த ஓட்டப் பிரச்சினைகள் மற்றும் குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தச் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டியிருக்கலாம். எனவே, இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள விரும்புபவர்கள் தகுதியான மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே முடிவெடுக்க வேண்டும்.
ஒருவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்பதற்காக அனைவருக்கும் இந்தச் சிகிச்சை பொருந்தும் என்று கருதிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |