கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய ராட்சதப் பாண்டா... கேக் சாப்பிடுற அழகைப் பாருங்க
உலகின் வயதான ராட்சத பாண்டாக்களில் ஒன்றான சின் சின் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பிறந்தநாள் கொண்டாடிய பாண்டா
மெக்சிகோ நாட்டில் விலங்கு தோட்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்காவின் கடைசி ராட்சத பாண்டா தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.
சின் சின் என்று பெயர் வைத்து அழைக்கப்படும் இந்த பாண்டா மெக்சிகோவில் பிறந்துள்ளது. மெக்சிகோவில் உள்ள சாபுல்டெபெக் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.

குறித்த வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் உள்ளவர்கள் பாண்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சின் சின்னின் பிறந்தநாள் கேக் அட்டைப்பெட்டியைக் கொண்டு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பாண்டாவிற்கு பிடித்த பழங்கள், உணவுகளை வைத்துள்ளனர்.
பாண்டா கேக் சாப்பிடுவதைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த காணொளி இணையத்திலும் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |