19 வயதில் இளம் கோடீஸ்வரர் பட்டம் பெற்ற பெண்....என்ன தொழில் பண்றாங்கனு தெரியுமா?
19 வயதில் உலகின் இளம் கோடீஸ்வரர் என்ற பட்டத்தை ஒரு பெண் பெற்றுள்ளார். 19 வயதில் அவர் எப்படி கோடீஸ்வராகினார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இளம் கோடீஸ்வரர்
இந்த பெண் பரேசில் நாட்டை சோந்தவராவார். அந்த வகையில் தான் சமீபத்தில் Forbes பத்திரிக்கை உலகின் கோடீஸ்வர நபர்களின் பட்டியலை வெளியிட்டது.
அதில் பிரேசிலைச் சேர்ந்த லிவியா வோகிட் என்ற இளைஞரும் இடம்பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
இந்திய மதிப்பில் இது ரூ.9,100 கோடியாகும். ஆனாலும் பலர் இதை சாத்தியம் இல்லை என்று கூறினாலும் இது உணமையான விஷயம் தான்.
லிவியாவின் தாத்தா வெர்னர் ரிகார்டோ வோகித் என்பவர் எகான் ஜயோ டா சில்வா மற்றும் ஜெரால்டோ வெர்னிங்காஸ் என்ற இரு கோடீஸ்வரர்களோடு இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இதனால் எலெக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து வரும் WEG என்ற நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை லிவியா வோகிட் சொந்தமாக வைத்துள்ளார். இதன் காரணமாக தான் லிவியோ வோகிட்19 வயதில் கோடீஸ்வரராக இடம்பிடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |