தனி கார், ஜெட் விமானம்.. 9 வயதில் உலகின் இளைய கோடீஸ்வரரான சிறுவன்
9 வயது சிறுவன் ஒருவன் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வரும் தகவல் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நைஜீரியாவை சேர்ந்த முகமது அவல் முஸ்தபா (Muhammed Awal Mustapha) என்ற 9 வயது சிறுவனுக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உலகம் முழுவதும் பல மாளிகைகள், தனி ஜெட் விமானம் மற்றும் விலை உயர்ந்த ரக கார்கள் என தனியாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றான்.
இந்த சிறுவன் உலகின் இளைய கோடீஸ்வரன் என்று புகழடைந்துள்ளான்.
மேலும், இவரின் இன்ஸ்டாவில் 25,000-க்கும் மேற்பட்ட ஃப்லோவர்கள் உள்ளனர்.
இஸ்மாலியா முஸ்தபாவின் (Ismailia Mustapha) மகன் தான் இந்த முகமது அவல் முஸ்தபா.
சொகுசு வாழ்க்கை வாழும் இந்த சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறான்.