7.5 கோடி சொத்து மதிப்பு: உலகின் மிக பணக்கார பிச்சைக்காரர் இவர் தான்
இந்தியாவில் மும்பை மாநகரில் சாலைகளில் பொதுமக்களிடம் பிச்சையெடுக்கும் நபருக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் தற்போதைய நிலவரப்படி 7.5 கோடி ரூபாய்க்கு அதிபதியாக வலம் வருகிறார் உலகின் மிக பணக்கார பிச்சைக்காரரான Bharat Jain.

சிறுவயதில் உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார் Bharat Jain, படிக்க வைக்கவும் வசதியில்லை, என்னசெய்வதென்றே தெரியாமல் பிச்சையெடுக்க முடிவு செய்தார். ஆனால் அதுவே அவரது வாழ்க்கையை புரட்டிப்போடும் என கனவிலும் நினைக்கவில்லை, கிட்டத்தட்ட 40 வருடங்களாக பிச்சையெடுத்து வருகிறார்.

ஒருநாளைக்கு 10 முதல் 12 மணிநேரம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இதை செய்து வருகிறாராம், ஒருநாளைக்கு குறைந்தது 2000 முதல் 2500 வரை வருமானம் வருகிறதாம், அப்படியானால் ஒரு மாதத்திற்கு 75000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
மும்பையில் இரண்டு குடியிருப்புகள் இவருக்கு சொந்தமானவை, ஒவ்வொன்றும் 1.4 கோடி ரூபாயாம், ஒரு குடியிருப்பில் இவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுதவிர தானேயில் 2 கடைகள் வாடகைக்கு விட்டுள்ளார், இதன்மூலம் மட்டும் மாதம் 30,000 ரூபாய் வருமானம் வருகிறது.
ஆனாலும் பிச்சையெடுப்பதை மட்டும் Bharat Jain நிறுத்தவில்லை, குடும்பத்தினர் கூறியும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.