உணவு, ஓய்வு இல்லாமல் உலக சாதனையை முறியடித்த பறவை: வியப்பில் மக்கள்!
உலக சாதனையை ஒரு பறவை முறியடித்துள்ள செய்தி தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக நாம் பல சாதனைப்படைத்த மனிதர்களையும் ஜாம்பவான்களையும் பார்த்திருக்கின்றோம். இந்த வரிசையில் சாதனையை முறியடித்து பறவை ஒன்றும் இடம் பிடித்துள்ளது.
ஆம், அந்த பறவை தான் பார்-டெயில் காட்விட் பறவை.
பார்-டெயில் காட்விட் பறவை
காட்விட் பறவையின் உடல் அமைப்பானது இது போர் ஜெட் விமானம் போல தோற்றமளிக்கும். இதன் இறக்கை மிகவும் கூர்மையாக இருக்கும்.
இந்த பறவைகள் கோடைக்காலத்தில் ஆர்டிக் பகுதியில் இருக்கிறது. அங்குள்ள மீன்கள், புழுக்களை உண்டு வாழும்.
இதன் உடலில் பெரும்பகுதி கொழுப்பாகவே இருக்கும் நீண்ட தூரம் பறப்பதற்கு ஏற்றவாறு இந்த பறவையின் உடல் அமைப்பு இருக்கிறது.
இப்பறவைகள் தண்ணீரில் இறங்கினால் இறந்துவிடும், அதன் காலில் வலை போன்ற அமைப்பு இல்லை, அதனால் இறங்க வழியே இல்லை.
அதனால் சோர்வு அல்லது மோசமான வானிலை காரணமாக கடலின் மேற்பரப்பில் விழுந்தாலோ, தரையிறங்கினாலோ அதுவே அப்பறவையின் கடைசி நிமிடமாக பார்க்கப்படுகிறது.
சாதனையை முறியடித்த பறவை
பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் 13,500 கிலோமீற்றர், இடைவிடாமல் பறந்து, ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம்பெயர்வுக்கான முன்பு சாதனையை முறியடித்தது.
இப்பறவையின் 11 நாட்கள் செயற்கைக்கோள் டேக் மூலம் இது கண்காணிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனைகளின் படி, "234684" என்ற டேக் எண் மூலம் அறியப்படும் பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் (8,435 மைல்கள்) உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் பறந்து சாதனையை முறியடித்தது.
முன்னதாக 2007 ஆம் ஆண்டில் இதே இனத்தை சேர்ந்த பெண் பறவை ஒன்று 11,680 கிலோமீட்டர் தூரத்தை இடைவிடாது பறந்து சாதனைப்படைத்திருந்தது.
இதனைப் பார்த்து மக்கள் இப்படியும் ஒரு பறவையா என வியப்பில் இருந்து மீளாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.