உலகின் மிக வயதான நபர் யார் தெரியுமா? அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் இதுதான்!
பிரித்தானியாவை சேர்ந்த உலகின் மிக வயதான நபர், தமது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நீண்ட ஆயுளுக்கான ரகசியம்
பிரித்தானியாவை சேர்ந்த 111 வயது ஜான் டினிஸ்வுட் என்பவர் தமது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்பது வெறும் அதிர்ஷ்டம் என்றே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும். தமக்கு மிகவும் பிடித்தமான மீன் உணவு கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டுக்கு முன்பே பணி ஓய்வு பெற்ற டின்னிஸ்வுட், உலகின் மிகவும் வயதான ஆண் என்ற கின்னஸ் உலக சாதனையை வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) என்பவரிடமிருந்து பெற்றுள்ளார்.
பெரெஸ் மோரா இந்த வார தொடக்கத்தில் மரணம் அடைந்ததை அடுத்து டின்னிஸ்வுட் உலகின் வயதான ஆணாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜான் டினிஸ்வுட் உலகிலேயே மிகவும் வயதான ஆண் என்ற அறிவிப்புக்கான கின்னஸ் அமைப்பு அதற்கான சான்றிதழையும் அவரிடம் ஒப்படைத்துள்ளது.
டின்னிஸ்வுட் 1912 இல் வடக்கு இங்கிலாந்தின் மெர்சிசைடில் பிறந்தார். ஓய்வுபெற்ற கணக்காளரும் முன்னாள் தபால் சேவை ஊழியருமான டினிஸ்வுட்டின் வயது 111 ஆண்டுகள் மற்றும் 222 நாட்கள்.
வடக்கு இங்கிலாந்தின் Merseyside பகுதியில் 1912ல் பிறந்தவர் ஜான் டெனிஸ்வுட். கணக்காளராகவும் அஞ்சல் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு அவர் எப்போதுமே ஒரே பதிலை அளித்து வந்துள்ளார்.
"நீங்கள் நீண்ட காலம் வாழ்கிறீர்களா அல்லது குறைந்த காலம் வாழ்கிறீர்ககளா என்பதை யாரும் திட்டமிட்டு செய்ய முடியாது. உண்மை என்னவென்றால் இது ஒரு அதிர்ஷ்டம் எனவே குறிப்பிடுகின்றார்.
இதுவரை உலகில் மிக அதிக காலம் வாழ்ந்த ஆண் என அறியப்படுபவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த Jiroemon Kimura என்பவரே. இவர் 116 ஆண்டுகளும் 54 நாட்களும் உயிர் வாழ்ந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டவரான Maria Branyas Morera என்ற பெண்மணி 117 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் என்றே கின்னஸ் சாதனை நூலில் பதிவுகள் குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |