ஒரு நாளைக்கு 3 இட்லி சாப்பிட்டால்? பலரும் அறியாத தகவல்
இந்தியர்களின் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இட்லியை குறித்து சில சுவாரசியமான தகவலை தெரிந்து கொள்ளலாம்.
3 இட்லியில் இருக்கும் சத்துக்கள்
உலக இட்லி தினமான இன்று இந்திய மக்கள் விரும்பி உண்ணும் இட்லியை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இட்லியில் ரவா இட்லி, பொடி இட்லி, தட்டு இட்லி, சாம்பார் இட்லி, மதுரை இட்லி, குஷ்பூ இட்லி, மல்லிபூ இட்லி என பல வகைகள் காணப்படுகின்றது.
தென்னிந்திய பாரம்பரிய சிற்றுண்டியாக சமையலறையில் பிறந்த இட்லி, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. ஸ்பெயின் போன்ற தொலைதூர ஐரோப்பிய நாடுகளிலும் இட்லி கிடைக்கிறது.
3 இட்லியை எடுத்துக் கொண்டால், 230 கலோரிகள், 20 கிராம் கார்போஹைட்ரேட், ஏழு கிராம் புரதம், ஐந்து கிராம் நார்ச்சத்து, 30 கிராம் கால்சியம் போன்றவை கிடைக்கின்றது.
பஞ்சு போன் இட்லிக்கு
நாம் அரிசி எடுத்துக்கொள்ளும் அளவிலிருந்து 3க்கு ஒரு பங்க வீதும் உளுந்து சேர்க்க வேண்டும். மேலும் வெந்தயம் சேர்த்தாலும் பஞ்சு போன்று வரும்.
அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதே போன்று ஊற வைக்கும் தண்ணீர் சுத்தமான இருக்கவும், ஏனெனில் அந்த தண்ணீரை தான் மாவு அரைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
உளுந்தை அரைப்பதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் உளுந்து நாம் எவ்வளவு நேரம் அரைக்கிறோமோ அந்த அளவிற்கு இட்லி நன்றாக வரும். உளுந்து அரைக்கும் போது தண்ணீர் தெளித்துதான் அரைக்க வேண்டும்.
ஆனால் அரிசி அரைக்கும் போது வெறும் 15 நிமிடங்கள் கொரகொரப்பாக அரைத்தால் போதும். நைசாக ஆட்டினால் இட்லி நன்றாக இருக்காது. அரிசி அரைப்பதற்கு தண்ணீர் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.
அரைத்த இரண்டு மாவைவும் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். அப்போது தான் இட்லி பஞ்சு போன்று வரும்.
அதே போன்று இட்லி ஊற்றும் போது மாவை பிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே ஊற்றாமல் 30 நிமிடம் கழித்து நன்றாக கலக்கி ஊற்றவும்.