கரை ஒதுங்கிய DoomsDay மீன்! இயற்கையின் பேரழிவின் அறிகுறியா? கலக்கத்தில் மக்கள்
மெக்ஸிகோ கடற்கரையில் அரியவகை மீனான DoomsDay மீன்கள் கரையெதுங்கியுள்ளது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை பேரழிவு
பொதுவாக இயற்கை பேரழிவுகளை முன்கூட்டிய உயிரினங்கள் கண்டுபிடிக்கும் திறன்களைக் கொண்டுள்ளது.
யானைகள், நாய்கள், பறவைகள் மற்றும எறும்புகள் உட்பட பல உயிரினங்களுக்கு இந்த குணம் உள்ளது. இவை வரப்போகும் பேரழிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தனது அசாதாரன நடத்தைகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.
இயற்கை பேரழிவை பற்றிய ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையை மனிதர்களுக்கும் கொடுக்கின்றன. வளர்ந்துவரும் அறிவியலும் கூட பல்வேறு நேரங்களில் இதனை உறுதிப்படுத்தி உள்ளன.
இந்நிலையில் தான் மெக்சிகோ கடற்கரையில் ஒதுங்கும் அரியவகை மீன்களான DoomsDay மீன்கள் பல நாடுகளை கவலையில் ஆழ்த்தி உள்ளன.
பேரழிவின் அறிகுறியா?
DoomsDay மீன்கள் கரை ஒதுங்கினால் இயற்கை பேரழிவு ஏற்படப்போவதாக அர்த்தமாம். குறித்த மீன் நீலமான ரிப்பன் போன்ற உடலமைப்பைக் கொண்டுள்ளது. ஆரஞ்சி நிற துடுப்புகளையும் கொண்டுள்ளது.
மெல்லிய உடலைக் கொண்ட இந்த மீன்கள் ஆழ்கடலில் மட்டுமே வாழக்கூடியதாகும். அதாவது 656 அடி முதல் 3280 அடி ஆழத்தில் தான் இவை வாழ்கின்றது.
ஜப்பானிய புராண கதைகளில் குறித்த மீனை கடவுளின் தூதர் என்று கூகின்றனர். அதாவது இயற்கை பேரழிவு வருவதற்கு முன்கூட்டி இந்த மீன்கள் கரையொதுங்கும் என்று கூறுகின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த பேரழிவு ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் சுமார் 20 DoomsDay மீன்கள் இறந்து கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மெக்சிகோவின் பசுபிக் கடற்கரையில் பஜஸூர் என்ற ஆழமற்ற நீரில் ஒரே ஒரு oomsDay மீன் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த மீனைக் கண்ட சிலர் இதனைக் காணொளியாக எடுத்துள்ளனர்.
இதனால் அசம்பாவிதம் ஏற்படுமோ என மெக்சிகோ மக்கள் மட்டுமல்லாது உலக மக்களும் அதிர்ச்சியோடு கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
இருப்பினும் இவை அனைத்தும் கட்டுக்கதை எனவும் கடலில் ஏற்படும் எல்மினோ மற்றும் லாநினா போன்ற மாற்றங்களினால் மட்டுமே இவை இறந்து கரை ஒதுங்குவதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |