மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தும் முதல் நாடு எது தெரியுமா? எத்தனை மணி நேரம் பயன்படுத்துகின்றனர்?
உலக அளவில் 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் சராசரியாக தினசரி 4 மணி நேரம் மொபைல் செயலிகளில் தங்கள் நேரத்தை செலவிடுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு ஆய்வின்படி உலக அளவில் அதிக நேர மொபைல் செயலிகளில் தங்கள் நேரத்தை செலவழிக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியா, தென்கொரியா மற்றும் மெக்சிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதில் இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4.8 மணி நேரம் மொபைல் செயலிகளில் செலவிடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான ஆய்வில் உலக அளவில் 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தினமும் சராசரியாக நான்கு மணி நேரம் மொபைல் செயலிகளில் தங்கள் நேரத்தை செலவிடுவது தெரியவந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். ஏனெனில் கடந்த காலாண்டில் 8 நாடுகளை சேர்ந்தவர்கள் தான் மொபைல் செயலிகளில் அதிக நேரத்தை செலவிட்டிருந்தனர்.
இந்தப் பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 5.5 மணி நேரம் மொபைல் செயலிகளில் செலவிடுகின்றனர்.
இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசில் மக்கள் ஒரு நாளைக்கு 5.4 மணி நேரம் செலவிடுகின்றனர். இதேபோல ஜப்பான், கனடா, ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த 12 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் ஸ்மார்ட்போன் செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக ஆப் அனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஒருவர் தொலைக்காட்சிகளில் செலவிட்ட நேரம் மூன்று மணி நேரமாக இருந்தது. ஆனால் சமீபகாலங்களில் ஒருவர் சராசரியாக 2.5 மணி நேரத்தை மட்டுமே டிவியில் செலவிடுவதும் தெரியவந்துள்ளது.
மொபைல் மற்றும் சமூக ஊடகங்களில் பயன்பாடு அதிகமாக அதன் காரணமாக தொலைக்காட்சிகளை மக்கள் பார்ப்பது வெகுவாக குறைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.