3 குழந்தை பெற்றால் 70 லட்ச ரூபாய் பரிசு: அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நாடு
இன்றைய நவீன காலக்கட்டத்தில் மக்கள் தொகையை குறைக்க பல நாடுகளும் குழந்தை பெற்று கொள்வதை குறைக்கவேண்டும் என அறிவுறுத்தி வரும் நிலையில், குழந்தை பெற்றுக்கொண்டால் லட்ச ரூபாய் பரிசு என அறிவித்திருக்கும் நாடு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியா நாட்டில் உள்ள சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் தலைநகரான சேங்வானில் இறப்பு விகிதத்தை காட்டிலும் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவது சமீபத்திய புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்தது. அதாவது தென் கொரியாவில் கடந்த 2020ம் ஆண்டில் 2,75,815 பிறப்புகளும், 3,07,764 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு இலட்சம் அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் ரூ.73,33,025) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 92 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறாக கடன் பெரும் தம்பதிகள் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் சமயத்தில் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும், இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ளும் சமயத்தில் கடன் தொகையில் 30 விழுக்காடு