காதலன் கூறிய ஆசை வார்த்தை... தோழிகள் மூலம் தெரிந்த பாரிய உண்மை! தீக்குளித்த இளம்பெண்
இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் தன்னை காதலித்த நபர் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்று அறிந்த இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அருண்பாண்டியன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் மாலைப்பட்டியைச் சேர்ந்த மில் வேலை செய்து வந்த ஆனந்திக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இதில் அருண்பாண்டியன் தனக்கு திருமணமானதை மறைத்து காதலித்தது மட்டுமின்றி, திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தனிமையிலும் இருந்துள்ளனர். இந்நிலையில் தோழிகள் மூலம் அருண்பாண்டியன் ஏற்கெனவே திருமணமானவர் என்பது ஆனந்திக்கு தெரியவந்துள்ளது. இதனால் இரண்டு நாட்களாக மனவருத்தத்தில் இருந்த ஆனந்தி இதுகுறித்து வீட்டில் யாரிடமும் கூறவில்லையாம்.
கடந்த காதலர் தினத்திற்கு முந்தைய நாள் ஆனந்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிசார் ஆனந்தியின் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு வன்கொடுமை சட்டத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.